பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் மனிதனுக்கு ஏதேனும் ஒரு பொருளால் துன்பம் உண்டாவது இயற்கை. ஆனால் அந்தத் துன்பம் உண்டாவதற்கு முன்பே அது வருமே என்று எதிர்நோக்கி அஞ்சிப் புதிய துன்பத்தை அவன் அடைகிறான். புலி அடிக்காவிட்டாலும் கிலி அடித்துவிடும் என்பது பழமொழி. தைரியம் இல்லாதவன் தான் படுகிற துன்பத்தைக் கண்டு சாவதோடு, வரப்போடும் துன்பத்தையும் நினைந்து புலம்புகிறான். போனதையும் நினைத்து அழுகிறான். 'போனது போய்விட்டது; இனி எது வந்தால்தான் என்ன?" என்ற உறுதியோடு செய்ய வேண்டியவற்றைக் கவனிக்காமல் கோழையாகிறான். பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்படி வரும் என்று யாராவது ஒரு குருட்டு ஜோஸ்யன் சொல்லியிருந் தால் அதனை நினைத்து இன்று முதலே துன்பப்படுகிறான். மன வலி இல்லாதவர்களின் இயல்பு இது. ஆண்டவன் திருவருளி னால் மன வலிமை பெற்றவர்கள் வருகிற துன்பம் எத்தனை பானாலும் வருவது வரட்டும் என்று தைரியத்தோடு எதிர்த்து நிற்பார்கள். அச்சமும் பாதுகாப்பும் "தைரியத்தோடு இருந்தால் வருகிற துன்பம் போய் விடுமா? நம் வீடு தீப்பிடித்துக் கொள்ள இருக்கும்போது, தீப்பற்றிக் கொள்ளாது என்ற தைரியத்தோடு இருந்தால் பற்றிக் கொள்ளாமல் இருக்குமா?' என்ற கேள்வியை யாராவது கேட்க லாம். வீட்டிலே தீப்பற்றிக் கொள்வதற்கும், மனத்திலே அச்சம் உண்டாவதற்கும் வேறுபாடு உண்டு. தீப்பற்றிக் கொள்ளும் என்று அறிந்து அதற்குப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். 'தீ வருமே என்று வாயால் சொல்லிக் கொண்டு துன்பமுறுவது அறிவு ஆகாது. பின்னாலே புலி வரலாம் என்றால், புலி வருமே என்று அஞ்சி ஏங்கிக் கொண்டிருத்தல் கூடாது. அது வருவதற்கு