பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பெய்வது இயற்கைதான். மழை பெய்யும் காலத்தில் அதற்குப் பயந்து கொண்டு வெளியில் போகாமல் இருப்பது சாத்தியம் அன்று. நம் கையில் குடை இருந்தால் மழையில் நனையாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்; வெளியில் போய் வரலாம். ஊர் முழுவதும் மழை பெய்து ஓய்ந்த பின்புதான் வெளியில் போக வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். யமனால் உண்டாகிய பயம் உலகம் முழுவதற்கும் பொது. யமன் என்று சொல்லாவிட்டாலும் மரணம் என்பது மனிதனுக்கு உண்டு என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். மரணாவஸ்தை நமக்கு வரும் என்று அறிந்து, அது வருவதற்கு முன்பு வேண்டிய பாதுகாப்பைத் தேடிக் கொண்டால் மரணத் துன்பத்தினின்றும் ஓரளவு நீங்கலாம். அந்தப் பாதுகாப்புத்தான் ஆண்டவனுடைய திருவருள். நுண்பொருளுக்கு அடையாளம் இனிமேல் வருகிற துன்பத்தை எண்ணி அஞ்சுவது மற் றொரு துன்பத்திற்குக் காரணமாகிறது. அந்த அச்சம் போக வேண்டுமென்றால் அதற்கு மாற்றாகச் சில உறுதிகளை மனத்தில் கொள்ள வேண்டும். பயம் என்பது கண்ணுக்குத் தெரியாத பொருள். யமனும் அத்தகையவன் தான். யமனை யாரேனும் பார்த்தது உண்டா? ஒருகால் இறந்து போனவர்கள் பார்த்திருக் கலாம். அதுவும் நிச்சயம் சொல்வதற்கு இல்லை. இறந்தவர்கள் திரும்பி வந்து சொன்னது இல்லையே! யமனை மரண தேவன் என்று சொல்வார்கள். அவன் கன்னங்கரேல் என்று இருப்பான்; எருமைக்கடா வாகனத்தின்மேல் வருவான்; கையில் திரிசூலம் வைத்திருப்பான்; பாசக் கயிற்றை வைத்திருப்பான்; அவன் கண் சிவப்பாய் இருக்கும் - இப்படிக் காலனைப் பற்றிய விவரங் களைப் புராணங்கள் சொல்கின்றன. இந்த உருவம் அவனைப் பார்த்துப் படம் பிடித்த உருவம் அன்று. பார்த்தவர்கள் யாரும் இல்லை. மரணம் என்ற ஒன்றை நாம் நினைக்க வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் உருவம் கொடுத்திருக்கிறார்கள். நுண் பொருளாக இருப்பதைப் பருப்பொருளாகக் கற்பனை செய்வது கலைத் தன்மையில் ஒரு வகை. நல்லதாக இருந்தாலும், பொல்லாததாக இருந்தாலும் உருவம் கொடுத்துக் கற்பனை iOC)