பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அதில் ஒரு பையன் ஒடுவது போலப் படம் எழுதி வைத்திருப் பார்கள். 'பள்ளிக்கூடத்துப் பையன்கள் நடமாடுகிற இடம் இது. ஆகையால் காரை மெல்ல ஒட்டு' என்று விரிவாக எழுதி வைப் பதற்குப் பதிலாக இந்தத் தகட்டை நட்டு வைத்திருக்கிறார்கள். கார் ஒட்டுகிறவர்களுக்கு இதன் பொருள் தெரியும். சொல்ல வேண்டியவற்றை விரிவாக எழுதி அங்கே வைத்திருந்தால், வேகமாகக் காரில் போகிறவர்களால் அதைப் பார்க்க முடியாது. அது அவசியமும் அன்று. விரிவாக இருப்பதைச் சுருக்கமாகவும், நுட்பமாக இருப்பதைப் பருப்பொருளாகவும் தெரிந்துகொள்ளச் சித்திரம் போட்டுக் காட்டுவது சிறந்த கலைப் பண்பு. அது நாகரிகத்துக்கு ஒத்ததே. செஞ்சிலுவை (Red - Cross) என்று ஒரு ஸ்தாபனம் இருக் கிறது. அதற்கு அடையாளம் செஞ்சிலுவை. அதைப் பார்த்தால் நோயாளிகளுக்கும் அகதிகளுக்கும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டாகிறது. அந்தச் சின்னத்தை அணிந்தவர்கள் சிறந்த தொண்டுகளைச் செய்வதனால் அதைக் காணும்போதே அவர்கள் செய்யும் காரியங்களை நாம் உணர்ந்து கொள்கிறோம். செஞ்சிலுவைக்கும் அந்தக் காரியத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பது இல்லை. காலனும் கால காலனும் இத்தகைய குறியீடுகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய பகுத் தறிவும், பொறுமையும் இருக்குமானால் யமன் என்ற குறியீட்டின் பொருளையும் நாம் தெரிந்து கொள்ளலாம். மரணம் வரும் என்ற உண்மையை யாவருக்கும் நினைப்பூட்டும் சித்திரம் அது. மரணத் திற்கு யமனுடைய உருவத்தைக் கொடுத்து, அந்த மரணத்தைப் போக்கும் பலம் இறைவன் திருவருளால் வரும் என்பதை நமக்கு அறிவிக்கவே சிவபெருமான் காலகாலன் என்பதையும் சொல்லி யிருக்கிறார்கள். அதற்கு ஒரு கதையையும் வழங்குகிறார்கள். இந்தக் கதையைச் சின்னஞ்சிறு பிராயத்தில் குழந்தைகள் தெரிந்து கொள்கிறார்கள். மரணம் என்பது இன்ன பருவத்தில் வரும் என்ற நிச்சயம் இல்லை. எந்தச் சமயத்திலும் நாம் மரணத்தை அடையலாம் என்பதை உணர்ந்து, அதற்குரிய 1O2