பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் பாதுகாப்பைத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்காகத்தான் காலன் கதையும், காலகாலன் கதையும் இந்த நாட்டில் வழங்கு கின்றன. யமனைப் பற்றி மாத்திரம் தெரிந்துகொண்டால் போதாது. யமனுடைய உருவம், யமன் செய்யும் காரியங்கள் ஆகியவற்றை எல்லாம் தெரிந்துகொள்பவன் யமனுக்கும் யமனாக இருக்கிற ஆண்டவனுடைய உருவம், அவனுடைய கருணைத் திருவிளை யாடல்கள், உபகாரங்கள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். பாவனையால் பயத்தை மாற்றுதல் நம்முடைய மனத்தில் ஒரு பயம் இருந்தால் அதை மாற்று வதற்கு ஒரு தைரியம் வேண்டும். பயம் மனத்தில் தோன்றுவது. அதை மாற்றும் தைரியமும் மனத்தில் எழுவது. பயம் கற்பனை யாக இருந்தால் அதை மாற்றும் தைரியம் கற்பனையாக இருக்க வேண்டும். பயம் உண்மையாக இருந்தாலும் அதை மாற்றுகின்ற தைரியத்தைப் பாவனை மாத்திரத்தால் உண்டாக்கிக் கொள்ளலாம். என் இளமையில் ஒரு பெரியவர் எனக்குச் சில உபதேசங்கள் செய்தார். மனத்தில் உண்டாகும் பயத்தை மாற்ற அவர் ஒரு வழி சொன்னார். பயத்திற்கு மாற்றாக அதனைப் போக்குகின்ற ஒரு பாவனை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். எங்கள் ஊர் காவேரிக் கரையில் சுடுகாடு இருக்கிறது. அங்கே பேய் இருப்பதாக இளம் பிராயத்தில் எனக்கு ஒரு பயம் உண்டாயிற்று. பேய் என்ற நினைவு வரும்போது எனக்குப் பயமாக இருக்கிறதென்று பெரியவரிடத்தில் சொன்னேன். பேய் உண்டா என்றும் கேட்டேன். அவர், 'பேய் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். பேய் என்ற நினைவினால் வரும் அச்சத்தைப் போக்க வழி சொல்லித் தருகிறேன்' என்று சொன்னார். 'பேய் உனக்குமுன் நிற்பது போலவும், உன்னுடைய கையில் ஒரு வாளை வைத்துக் கொண்டு அதை வெட்டுவது போலவும் கற்பனை செய். அப்படி வெட்டிய போது பேய் கதறுவதாகவும், இறந்துவிட்டதாகவும் பாவனை செய். அப்போது பேய்ப் பயம் போய்விடும்' என்றார். க.சொ.V-8 103