பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பணமும், பணக்காரர்களும்; நோய்த் துன்பத்திற்கு மாற்று மருந் தும் மருத்துவர்களும்; தனிமைத் துன்பத்திற்கு மாற்று உறவினர் களும், நண்பர்களும்; அறியாமைத் துன்பத்திற்கு மாற்றுக் கல்வி; பசித் துன்பத்திற்கு மாற்று உணவு; புலன்களின் பசிக்கு மாற்று, புலன்களால் நுகரப்படும் அநுபவம். இப்படித் துன்பமும் அதனைப் போக்குகின்ற முறிவுமாகப் பலவற்றை உலகத்தில் பார்க்கிறோம். தமக்கு ஒரு துன்பம் வருமா, வராதா என்பது தெரியா விட்டாலும் அதற்குரிய பாதுகாப்பைப் பலர் தேடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாணம் பண்ணிக் கொண்டவன் தனக்குப் பிள்ளை பிறக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் பிறந்தால் அவனுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று சொத்துச் சேர்த்துக் கொள்கிறான். ஒரு பெண்மணி தனக்குப் பெண் பிறக்கும் என்ற நிச்சய புத்தி இல்லாவிட்டாலும் தானும் போட்டுக் கொண்டு தனக்குப் பிறக்கும் பெண்ணுக்கும் போட வேண்டுமென்று நகைகளைச் சேர்த்துக் கொள்கிறாள். நிச்சயம் இல்லாத ஒன்றை எதிர்பார்த்து முன்கூட்டியே பல காரியங்களைச் செய்யத் தெரிந்து கொண்டிருக்கும் நாம், நிச்சயமாக வரக்கூடிய காலனுடைய துன்பத்திற்கு மாற்றாக என்ன செய்திருக்கிறோம். என்பதை நினைந்து பார்க்க வேண்டும். அருணகிரியார் அப்படி நினைந்து பார்த்து அந்தக் கால னையே வெட்டி வீழ்த்துவதற்கு ஒரு வாள் வேண்டும் என்று கருதினார். பெளதிகமான வாளால் பயன் இல்லை என்று தெரிந்து இறைவனுடைய அருளாகிய சக்தி வாளை யாசித்தார். பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்று எண்ணி அவற் றையே துணையாகத் தேடிக் கலங்கி நிற்கிற நம்மைப் போல இல்லாமல், யார் மெய்யான பொருளோ, எவனுடைய துணை மெய்யான துணையோ அவனையும், அதனையும் அவர் பெற்றார். அவருக்கு மயக்கம் தெளிந்தது. சத்தியமான பொருளை அடைந்து சத்தியமான துணையை அடைவதைக் காட்டிலும் தெளிவு வேறு என்ன இருக்கிறது? அந்தத் தெளிவை இறைவன் தமக்குத் தந்ததாகச் சொல்கிறார். 'இதற்கு முன்னாலே நான் மயக்கத்தில் வீழ்ந்து இருந்தேன். இப்போது கந்தசுவாமி அந்த மயக்கத்தைப் போக்கி எனக்குச் 108