பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் அழகான வண்டியைப் பண்ணுகின்ற தச்சன் ஒருவன் இளம் பிராயத்தில் தன் தந்தையிடத்தில் அத்தொழிலைக் கற்றுக் கொண்டான். பலருக்கு வண்டி பண்ணிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டான். முதலில் தன் தந்தைக்கு வண்டி செய்து கொடுத்தான். தன் தந்தையால் வண்டி செய்து கொள்ள முடியாது என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. எல்லோருக்கும் உபகாரம் செய்யும்போது அந்த உபகாரம் விளங்கவேண்டும என்றும், அதற்கு மதிப்பு உண்டாக வேண்டும் என்றும் தன் தந்தைக்கு முதலில் செய்து கொடுத்தான். அந்த வகையில் முருகப் பெரு மான் தன்னுடைய தந்தைக்குத் தனி ஞான வாளைக் கொடுத் தான். அப்படிக் கொடுத்ததனாலேயே முருகப் பெருமானுடைய பெருமையை உலகம் முழுவதும் உணர்ந்து கொண்டது. ஆற்றலும் கருணையும் முருகப் பெருமானுடைய பெருமைக்கு அவன் குருநாதனாக இருந்தது ஒரு பெரிய அடையாளம். இறைவனிடத்தில் மற்றவர் களுக்கு இல்லாத பெரிய ஆற்றல் இருக்கிறது. அதோடு வேறு யாருக்கும் இல்லாத கருணையும் இருக்கிறது. அவனுடைய ஆற்றல், படைத்தல் முதலிய காரியங்களுக்கு உதவியாக இருக் கிறது. ஆருயிர்களுக்கு அருள் அநுபவம் கொடுப்பதற்காக அவன் கருணையை வைத்திருக்கிறான். அவனுடைய ஆற்றல் பொது வானது; அதாவது எல்லா ஆருயிர்களுக்கும் அந்த ஆற்றல் உதவுகிறது. ஆனால் அவனுடைய கருணையோ சிறப்பானது; யார் யார் அதை நாடி வருகிறார்களோ அவர்களுக்கு நலம் செய்வது. இறைவனின் பெருமைகளை எண்ணும்போது நமக்கு வியப்பு உண்டாகிறது. ஆனால் அவனுடைய கருணையை எண்ணும்போது நாமும் அதைப் பெறவேண்டும் என்ற ஆசை உண்டாகிறது. வியப்பு உண்டாகும்போது நாம் சற்று எட்டி நின்று பார்த்துக் கும்பிடுகிறோம். கருணையை நினைந்து நம்பிக்கை உண்டாகும் போது அவனைத் தொட்டு நின்று இன்பம் அடைய வேண்டும் என்று எண்ணுகிறோம். முருகப்பெருமானது பெருமைக்கு அறிகுறி அவன் குமரகுருபரனாக இருந்து தந்தைக்கு முன்னம் தனி ஞான வாள் ஒன்று தந்தது. அவனுடைய கருணையைக் காட்டும் சிறந்த செயல் வள்ளியம் பெருமாட்டியை ஆட் 111