பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வாள் என்பது கூர்மையானது. வாள் என்ற சொல்லுக்கு ஒளி என்றும் பொருள் உண்டு. அஞ்ஞானம் என்ற இருட்டைப் போக்குகின்ற ஞானமாகிய ஒளியைக் கொடுத்தான். வாளுக்கும் கூர்மை உண்டு. அறிவுக்கும் கூர்மை உண்டு. கல்வி, கேள்வி, அநுபவம் என்ற மூன்றினாலும் ஞானம் உண்டாகிறது. அநுபவ ஞானம் மிகச் சிறந்தது. அதை அபரோக்ஷ ஞானம் என்றும், பர ஞானம் என்றும் சொல்வார்கள். இந்த ஞானத்தை ஆண்டவன் நமக்கு வாளாகக் கொடுக்கிறான். அதனால் அறியாமையாகிய இருளைப் போக்கி, சரீர அபிமானத்தைச் சேதித்து, அறியாமை யின் விளைவாக வருகின்ற மரணத்தையும் மாய்த்து விடலாம். சக்தி வாள் 'இறைவன் சக்தி வாள் தந்தான். அதனுடைய உதவியால் காலன் வந்தால் துணித்துவிடுவேன்' என்று பேசுகின்றார் அருண கிரியார். அவனுடைய அருளே சக்தி வாள். சக்தி என்பது அருள் தான். இறைவனிடம் அமைந்திருக்கும் ஆற்றல் அருள். அவன் அருளே யம பயத்தைப் போக்கும் சக்தி வாளாக உதவும். அந்த வாளை ஒச்சுவதற்கு நாம் முயலவேண்டும். படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குகிறோம் என்றாலும் படுக்கையே தூக்கத்தைத் தருகிறது என்று சொல்ல முடியாது. தூங்குகின்ற சக்தி உடைய வனுக்குப் படுக்கை தூக்கத்தை உண்டாக்கும் கருவியாக இருக்க லாம். இதை எண்ணாமல் படுக்கைதான் தூக்கத்தை உண்டாக்கு கிறது என்று எண்ணி மனத்தில் கவலைகளை வைத்துக் கொண்டு படுத்தால், எத்தனை உருண்டு புரண்டாலும் தூக்கம் வராது. நம்முடைய மனநிலை தூக்கம் வருவதற்கு ஏற்றதாக இருந்தால் தான் படுக்கையும் சாதனமாக இருந்து தூங்குவதற்கு இடம் கொடுக்கும். ‘எம்பெருமான் எனக்குச் சக்தி வாள் தந்தான். அதனால் இனி மரண பயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தைரியத் தோடு முனிவர் பேசுகின்றார். இந்த வாள் ஆண்டவனுடைய கையில் இருக்கிறது. நமக்கும் உதவுவான், ஆனால் அதைப் பெறுவதற்குரிய பக்குவத்தைப் பெற்று அப்பால் அவனுடைய திருவருளால் அது கிடைக்கப் பெற்றால்தான் நாமும் கால ஜயம் பண்ணுகின்ற நிலைக்கு வருவோம். 1.14