பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் கந்தசுவாமி நம்மைத் தேற்றுவதற்கு அவனிடத்தில் போய் அழ வேண்டும். வாசலிலே விளையாடச் சென்ற குழந்தை துன்ப முற்று அழுதுகொண்டே தாயிடத்தில் வந்தால் தாய் அந்தக் குழந்தையை அணைத்து முதலில் தேற்றிப் பின்பு அதற்கு வேண்டிய உணவைத் தருகிறாள். உலகத்தில் நாம் படுகிற துன்பங்களுக்கு அஞ்சி முருகப் பெருமானிடத்தில் போய் அழுது நின்றால் அவன் நம்மைத் தேற்றுவான்; சக்தி வாளைத் தருவான். வழியில் போகிற பெண்மணி தெருவில் நிற்கும் குழந்தைக்குத் தேறுதலோ நன்மையோ செய்யமாட்டாள். யாரிடத்திலிருந்து தேறுதல் வரும் என்பதைக் குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும். அநாதைக் குழந்தைக்கு ஊரெல்லாம் தாய்தான். ஒருத்தியும் தாய் அல்ல என்று சொல்கிற நிலையும் உண்டாகும். யார் தனக்கு அருள் செய்வாள் என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பது அதற்கு ஒரு பெரிய வேலையாக இருக்கும். முருகப் பெரு மானைக் கண்டுபிடித்து அவன்தான் நம்மைத் தேற்றுவதற்கு உரியவன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொள்ள அவனிடம் அடையாளம் இருக்கிறது. அவன் தந்தைக்கு ஞானவாளைச் சாதித்தவன். தந்தைக்கு முன்னம் தனிஞான வாள் ஒன்று சாதித்தருள் கந்தச்சுவாமி சாதித்தல் என்றால் கொடுத்தல் என்று இங்கே பொருள். வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பரிமாறுவதைச் சாதித்தல் என்று சொல்வார்கள். கந்த சுவாமி என்று சொல்லுக்கு முன்னே பொருள் சொல்லி யிருக்கிறேன். ஆறு திருவுருவங்களையும் ஒன்று சேர்த்துக் கந்தன் என்ற பெயரை அம்பிகை கொடுத்தாள் என்று நூல்கள் கூறு கின்றன. பிரித்து வைத்திருக்கிறவற்றையெல்லாம் ஒட்ட வைக் கின்றவன் ஆண்டவன். தளர்ந்து போனதற்கு முறுக்கு ஏற்றி, சிதைந்து போனதை ஒன்றுபடுத்தி வலிமை உடையதாகச் செய் கின்றவன் ஆண்டவன். ஆறு கூறாக இருந்த குழந்தைகளை எல்லாம் ஒன்றாக உமாதேவி செய்ய, முருகு ஏறிய திரு வுருவத்தை ஏற்று எம்பெருமான் அருள் செய்கின்றான். பிரித்துப் பிரித்துப் பார்க்கின்ற தன்மையினால் உடலினின்றும் உயிரைப் பிரிக்கிற கூற்றுவனின் பாசத்திற்கு ஆளாகிறோம். பிரிப்பதை மாற்றி ஒன்றுபடுத்தி அருள் செய்கின்ற கந்த சுவாமி i. i.5