பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி வாள் 'காலன் என்னிடத்தில் வரமாட்டான். ஒருகால் வந்து விட்டால் என் கையில் உள்ள சக்திவாள் ஒன்றினாலேயே, என்னைக் குத்திக் கொல்ல வருகின்ற அவனுடைய திரிசூல மாகிய படையை அடியோடு அழித்துத் தள்ளுவேன்' என்று வீறு பேசுகின்றார். காலன் என்ற தத்துவத்தை நாம் அடியோடு மாற்ற முடியாது. அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பாகிய சூலத்தை நம் அளவில் உடைத்து விடலாம். யமன் இன்னார் என்று தமக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்த்த அவனை அடையாளத்தோடு குறிக்கிறார். வேறு யாராலும் தணிக்க முடியாத கோபத்தைப் பெற்ற மூன்று தலை உடைய சூலத்தை நான் வெட்டுவேன்' என்று சொல்கிறார். யமனுடைய கோபத்தைத் திரிசூலத்தின் மேல் ஏற்றிச் சொன்னார். அவனுடைய கோபத்தை யாராலும் தணிக்க முடியாது. இறைவன் திருவருள் இருந்தால் அந்தக் கோபத்திற்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை. சித்திரம் அருணகிரியார் தம்முடைய மனத்திற்குள் ஒரு சித்திரத்தை அமைக்கிறார். காலன் எல்லா உயிர்களிடத்திலும் செல்வது போல அருணகிரிநாதரிடத்தில் வருகிறான். மற்றவர்கள் மரணா வஸ்தைப்படுகிறார்கள். காலன் வருவானே வருவானே என்று பயந்து, வரும்போது அவன் வெட்டுவானே என்று நடுங்குகிறார் கள். அருணகிரிநாதரோ சிறிதும் அச்சம் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறார்; நடுங்கவில் லை. அதனைக் கண்டு வெதும்வும் இல்லை. இதைக் காலன் பார்க்கிறான். இந்த மனிதன் புதுவிதமாக இருக் கிறானே; நம்மைக் கண்டு நடுங்கவில்லையே! என்று நினைக் கிறபோது அவனுக்குக் கோபம் உண்டாகிறது; வெம்புகிறான். கோபத்தினாலே உடம்பு நடுங்கும் அல்லவா? இப்போது நடுக்கம் அருணகிரிநாதரிடத்தில் இல்லை. யமனிடத்தில் இருக் கிறது. கலங்குகின்ற மனிதர்கள் காலனைக் கண்டால் நடுங்கு வார்கள். அருணகிரிநாதரிடத்தில் கலக்கம் இல்லை. அந்தக் கலக்கம் இப்போது யமனிடம் ஏறிவிட்டது. 'எல்லோரும் நடுங்கும் நம்மிடத்தில் இவன் நடுங்காமல் இருக்கிறானே! என்று அவன் கலங்குகிறான். அவனுடைய உடம்பு கோபத்தால் துடிக்கிறது. 117