பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மீசை படபடக்கிறது. அவனுடைய திரிசூலம் நடுங்குகிறது. அவனுக்கு எதிரே முருகப் பெருமான் தந்த சக்திவாளை, அருளாகிய வாளைக் கையில் வைத்திருக்கிறார் அருணகிரியார். இப்படி ஒரு விதமாக மனத்தில் பாவனை செய்து கொண்டு இந்தப் பாடலை அருணகிரிநாதர் பாடியிருக்க வேண்டும். அத் தகைய பாவனையை அவர் மாத்திரமா செய்தார்? நாமும் செய்யும் படியாக இந்தப் பாட்டைக் கொடுத்திருக்கிறார். தந்தைக்கு முன்னும் தனிஞான வாள் ஒன்று சாதித்தருள் கந்தச் சுவாமி எனைத்தேற் றியபின்னர்க் காலன்வெம்பி வந்துஇப் பொழுதுஎன்னை என்செய்ய லாம்?சத்தி வாள்.ஒன்றினால் சிந்தத் துணிப்பன் தணிப்பரும் கோபத்ரி சூலத்தையே. (தன்னுடைய தந்தையாகிய பரமசிவனுக்கு ஒப்பற்ற ஞானமாகிய வாள் ஒன்றைத் தந்தருளிய கந்தப் பெருமான் அடியேனுடைய கலக்கம் யாவும் தீர்த்துத் தெளிவித்த பிறகு, காலன் சினம் கொண்டு இப்பொழுது வந்து என்ன செய்ய முடியும்? அப்படி அவன் வந்தால் முருகன் எனக்குத் தந்தருளிய சக்திவாள் ஒன்றினால் யாராலும் தடுப்பதற்கரிய கோபத்தை யுடைய அவனது முத்தலைச் சூலப்படையைக் கீழே விழும்படியாக வெட்டிவிடுவேன். தனி ஞானவாள் - வேறு யாருக்கும் கொடுக்காத ஒப்பற்ற ஞான மாகிய வாள். சாதித்தருள் - வழங்கியருளிய. வெம்பி - சினம் மூண்டு. சக்தி வாள் - அருளாற்றலாகிய வாள். துணிப்பன் - வெட்டுவேன். தணிப்ப அரும் - தணியச் செய்வதற்கு அரிய.) 'முருகன் தந்தைக்கே சிறப்பான வாள் ஒன்றைத் தந்தான்; துமுதல் பலருக்கு வாளைத் தரும் வழக்கம் அவனுக்கு உண் ாயிற்று. எனக்குச் சக்தியாகிய வாள் தந்தருளினான். அது ாலனுடைய படையாகிய முத்தலைச் சூலத்தையே அழிக்கும் ஆற்றலுடையது' என்றார். முருகன் திருவருள் இருந்தால் மரணத்துக்கும் அஞ்ச வண்டாம் என்பது கருத்து. இது கந்தர் அலங்காரத்தில் 69-ஆம் பாடல். +18