பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்கார விளக்கச் சொற்பொழிவுகள் அடங்கிய அலங்கார மாலையில் இது பதின்மூன்றாவது மலர். இந்தப் புத்தகத்தில் அறுபத்தாறாவது பாடல் முதல் அறுபத்தொன்ப தாவது பாடல் வரையில் உள்ள நான்கு பாடல்களுக்குரிய விரிவுரைகள் இருக்கின்றன. போலிவேதாந்தம் பேசி, வாழ்க்கையில் அநுபவம் பெறு வதற்குரிய நெறியில் நடவாத மக்களை எண்ணிப் பரிகாசமாகப் பாடிய பாட்டு முதலில் இருக்கிறது. உடல் நிலையாமை, செல்வ நிலையாமைகளை வாயினால் பேசி, பிறருக்கு உதவும் இயல் பில்லாதவர்களின் ஞானம் போலியானது என்கிறார் அருண கிரியார். இரண்டாவது விரிவுரையில் வரும் பாடல் மானிடப் பிறவி யின் அருமையையும் இதனைப் பெற்றதனால் செய்ய வேண் டியதையும் குறிக்கிறது. இவ்விடத்தில் மானிடப் பிறவி சிறந்ததென்பதற்குரிய காரணங்களையும், பாரத நாட்டில் எடுத்த பிறவி பின்னும் சிறந்தது என்பதற்குரிய காரணங்களையும் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். இந்தப் பாடலின் பிற்பகுதியில் தேவயானையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் அருணகிரியார். அப்பிராட்டியைப் பற்றிய செய்தி மிகவும் அருமையாகவே வருகிறது. இப்பகுதிக்குரிய விளக்கத்தில் கந்தபுராணத்தில் வரும் தேவயானை திருமண வரலாற்றை விரிவாகச் சொல்லியிருக் கிறேன். அடுத்த பாடல் முருகனுடைய அன்பு முறுக முறுகக் கால தேச எல்லை கடந்த இன்பம் உண்டாகும் என்பதைச் சொல்வது. அதீதத்திலே உண்டாகும் பேரானந்த நிலையை அப்பாடல் சொல்கிறது. இப்புத்தகத்தில் உள்ள கடைசிக் கட்டுரை யமபயத்தைப் போக்கும் தன்மை வாய்ந்தது. முருகப் பெருமானுடைய திருவருள்