பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நிற்கிறோம். நாம் அவர்கள் சென்ற நெறியிற் செல்லவோ, அவர் களைப் போல் ஆகவோ எண்ணுவதில்லை. இறைவன் அருள நுபவம் என்பது ஏதோ சிலருக்குத்தான் உரியது, நமக்கு அது வேண்டியதில்லை என்பது போன்ற எண்ணமே நம் உள்ளத்தில் நிலவுகிறது. கம்பங்களின் மீது ஏறி அற்புதமான வித்தைகளைக் காட்டு கிறான் ஒருவன். அவனைப் பாராட்டிப் பரிசளிக்கிறோம். நல்ல இசைக் கச்சேரி செய்கிறார் ஒரு வித்துவான். அதைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டுகிறோம். சிறந்த புலவனைக் கண்டு அவ னுடைய கவிதையாற்றலை வியந்து போற்றுகிறோம். நாமும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்ற நினைப்போ முயற்சியோ நம்மிடம் எழுவதில்லை. அவ்வண்ணமே அருள நுபவம் பெற்ற பெரியவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவர்களை மதிக்கவும், போற்றவும் வியக்கவும் சித்தமாக இருக்கிறோமேயன்றி, நாமும் அப்படி ஆக வேண்டும் என்ற விருப்பம் எழுவதில்லை. அத்தகைய விருப்பம் நமக்கு எழ வேண்டியது அவசியம். பெரு மக்களுடைய திருவாக்குகளைப் படிப்பதற்கு இது மிகவும் முக்கியமான பயன். நாமும் அவர்கள் பெற்ற நிலையை அடையலாம் என்ற நம்பிக்கையையும், முருகன் பரம கருணை உடையவனாதலால் நம்மையும் ஏற்றுக் கொள்ளுவான் என்ற உறுதியான எண்ணத் தையும் நாம் பெறவேண்டும். அருணகிரிநாத சுவாமிகளுடைய திருவாக்கில் அழுந்தினால் அத்தகைய எண்ணங்கள் நிச்சயமாக உண்டாகும். நாமும் அவர்கள் போன நெறியில் போகவேண்டும் ன்ற ஆசை உண்டாக இவ்விரிவுரைகள் பயன்பட வேண்டும் ான்பது என் நோக்கம். கரும்பைப் பற்றிய விரிவான சொற் பொழிவைக் கேட்டவன் தானும் கரும்பைப் பற்றி ஒரு சொற் பொழிவு ஆற்றவோ, கட்டுரை எழுதவோ புகுந்தால் முதலில் கேட்ட சொற்பொழிவு பெரிய பயன் தந்தது என்று சொல்ல இயலாது. கரும்பைத் தேடி அதன் சுவையை நுகர வேண்டும் என்று ஆவலை உண்டாக்கினால் சொற்பொழிவு பயனுடைய தாயிற்று என்று கொள்ளலாம். அதுபோலவே அருணகிரியார் பெருமையையும், முருகனுடைய சிறப்பையும் உணர்ந்த அளவில் 124.