பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை நின்றுவிட்டால் இந்த விரிவுரைகளால் பயன் உண்டாயிற்றென்று கருத இடமில்லை. சிலரேனும் அருளநுபவத் துறையில் புகுந்தால், பெரும்பயன் உண்டாயிற்றென்ற மனநிறைவு உண்டாகும். என்னுடைய ஆற்றல் வீணாகிவிடுமே என்ற எண்ணத்தால் இப்படி எழுதுவதாக அன்பர்கள் நினைக்கக் கூடாது. கற்பக தருவைப் போன்ற அருணகிரிநாதர் இவ்வளவு நெருங்கி வந்து சொல்வதைக் கேட்முப் பயன்பெறாமல் இருக்கலாமா என்ற எண்ணமே இப்படி எழுதுவதற்குக் காரணம். "நாம் என்ன அடைந்தோம்?' என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, 'ஒன்றும் அடையவில்லையே' என்ற ஏக்கம் அழுத்தமாக உள்ளத்தில் எழ, அதன் பிறகு "வழி என்ன?’ என்று நாடப் புகுந்தால் பயன் கிடைக்காமலா போகும்? முருகன் கருணையும் அருணகிரியார் அரிய உபதேசமும் இருக்கும்போது அவ நம்பிக்கைக்கு இடமே இல்லை. "நம்பினார் கெடுவதில்லை - நான்கு மறைத் தீர்ப்பு." ★ ★ ★ கந்தர் அலங்கார விரிவுரை மாலையிலே 14-ஆவது மலராகிய இதில் ஐந்து பாடல்களின் விளக்கங்கள் உள்ளன. நமக்கு என்றும் துணையாக முருகன் இருப்பான் என்பதைச் சொல்வது, "விழிக்குத் துணை' என்னும் பாடல். அந்த பாட்டை எத்தனை முறை ஓதினாலும் தகும். அச்சத்தைப் போக்கப் பாராயணம் செய்வதற்குரிய அருமைப் பாட்டு அது. ஹடயோகத்தை எல்லாப் பெரியவர்களும் கண்டித்திருக் கிறார்கள். அருணகிரியாரும் 'துருத்தி யெனும்படி” என்ற பாட்டில், திணறித் திண்டாடும் யோகிகளைப் பார்த்து இரங்குகிறார். சிவயோகம் இன்னதென்று அறிந்து பயிலுங்கள் என்று உபதேசிக்கிறார். இந்தப் பாட்டில் சிவயோகம் என்பது இன்னது என்று விளக்காவிட்டாலும் திருப்புகழில் வரும் பாடல் ஒன்றைக் கொண்டு அவருடைய கருத்தை ஒருவாறு புலப் படுத்தியிருக்கிறேன். எக்காலத்தும் மறவாமல் முருகனை நினைக்க வேண்டும் என்பதை வற்புறுத்துவது, "சேந்தனை' என்ற பாட்டு. ஒரு 125