பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தாழ்வும் இல்லாமல் வாழ வழி வகுக்கும் அந்தப் பாட்டிலே முருகனுடைய பெருமைகள் பல வருகின்றன. அடுத்தது அருணை முனிவரின் அநுபவப் பாட்டு; நம்மை ஈர்த்து மயக்கும் பாட்டு. சொல்லொணாத ஆனந்தத்தின் இயல்பை எதிர்மறை வாய்ப்பாட்டால் சுற்றிக் காட்டுகிறார். தாம் அந்த அருளநுபவத்தால் தாக்கப் பெற்றதையும் மனம் நின்றதை யும் தாம் அந்த அநுபவ மயமானதையும் சொல்லி, "அறு முகவா சொல்லொணாதிந்த ஆனந்தமே" என்று முடிக்கிறார். இத்தகைய அநுபவத்தை நாம் பெற முடியா விட்டாலும் இன்னும் சில பிறவிகளிலாவது பெற வேண்டாமா? அதைப் பெறும் வழியிலே போயாவது நிற்கலாமே! அடுத்த பாட்டில் நமக்கு ஏற்ற வழியைச் சொல்கிறார். அவனருள் வேண்டும்; அதனால் அன்பு அவிழ்ந்து மலர வேண்டும்; அதனால் அவனடி தொழ வேண்டும்; அதனால் இந்திரியங்களின் குறும்பற்று உண்முக நாட்டம் உண்டாக வேண்டும்; அதனால் மனம் பதைப்பற வேண்டும். இவ்வாறு படிப்படியாகச் சாதனங்களை உபதேசிக்கிறார் அருணகிரி யாராகிய பரம குருநாதர். இராப் பகல் அற்ற இடத்தே இருந்து சொல் லொணாத ஆனந்தத்தைத் துய்க்கும் வழி அறிந்த அப் பெருமானுடைய திருவாக்கிலே ஆழ்ந்து அமிழ்ந்து கரைந்து, “நமக்கும் அந்த நிலை வராதா?’ என்று ஏங்க வேண்டும். அந்த ஏக்கமே நம் முயற்சிக்குத் தூண்டுகோலாக உதவும். இந்த ஐந்து பாடல்களில் செங்கோட்டு வேலன் இரண்டு பாடல்களில் காட்சி தருகிறான். முருகன், செங்கோடன், முகம் ஆறுடைக் குருநாதன், சேந்தன், கந்தன், செங்கோட்டு வெற்பன், செஞ்சுடர் வேல் வேந்தன், செந்தமிழ் நூல் விரித்தோன், வள்ளி காந்தன், கந்தக் கடம்பன், கார்மயில் வாகனன் அறுமுகவன், அராப்புனை வேணியன் சேய் என்ற அவன் திருநாமங்களை அருணை முனிவர் நினைப்பூட்டுகிறார். அவனுடைய பாதங் களையும் பன்னிரு தோள்களையும், முகம் ஆறினையும் தரிசிக்கச் செய்கிறார். அவனுடைய வடிவேலையும், மயூரத்தையும், வள்ளி நாயகியையும், கடம்ப மாலையினையும் கண்டு போற்றச் செய்கிறார். 126