பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை நாம் இப்போது ஒரு யாத்திரை செய்து கொண்டிருக் கிறோம். இந்த யாத்திரை இன்று நேற்று வந்தது அல்ல. சாட்டை இல்லாத பம்பரம் போல ஆடும் பிரபஞ்சத்தில் கலந்து ஆடிக் கொண்டும் ஒடிக்கொண்டும் இருக்கிறோம். இந்தப் பிறவி போனால் அடுத்த பிறவி, அதன் பிறகு மற்றொரு பிறவி என்று ஓயாமல் ஒழியாமல் இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டு வருகிறது. இதற்கு முன்னால் எத்தனை பிறவிகள் எடுத்தோமோ அது நமக்குத் தெரியாது. நம் அவதாரம் அருணகிரிநாதர் அதற்கு ஒரு கணக்குச் சொல்லலாம் என்று பார்த்தார். அவரால் முடியவில்லை. ஏழு கடலின் கரையில் இருந்து அங்குள்ள மணல்களை எண்ணிப் பார்த்தாலும் அதைவிட அதிக மான எண்ணிக்கையுடைய என் பிறவிகள் என்று சொல்கிறார். "எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்." இறைவனுடைய திருஅவதாரத்திற்கும், நம்முடைய பிறப்புக்கும் எத்தனையோ வகையில் வேறுபாடு உண்டு. நம் பிறவிகள் அத்தனையும் துன்பமானவை; இடையூறு நிறைந் தவை. இறைவனுக்கு அருகில் நெருங்க வேண்டிய நாம் பிர பஞ்சம் என்னும் சேற்றில் அழுந்தி, கீழே இறங்கிக் கொண்டிருக் கிறோம். அவதாரம் என்பதற்கு இறங்குதல் என்று பொருள். இதுவும் ஒரு வகையில் குப்புற விழும் அவதாரந்தான். இன்னும் இந்தப் பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தால் இந்தத் துன்பத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விடும். எப்போதா வது ஒரு சமயம் இந்தப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏறவேண்டிய இடத்தில் ஏறிக்கொள்ளவேண்டும். இறை வனுடைய திருவடியாகிய மோட்சத்தில் ஏறிக் கொண்டால்