பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 அப்புறம் கீழே இறங்கவேண்டிய அவசியம் இல்லை; பிரயாணத் தொல்லையும் இல்லை. உடன் வருபவை இந்த நீண்ட பிரயாணத்தில் நமக்கு எப்போதும் உடன் வருபவை இரண்டு. புண்ணியம் பாவம் என்னும் இரண்டுமே நம்முடைய பயணத்தை நீட்டித்துக் கொண்டு வருகின்றன. இப் பிறவியில் நாம் சேமிக்கிற பொருளும், பிற வாழ்க்கை வசதி களும் இந்த உடம்போடு நாம் இருக்கிற வரைக்குந்தான் நமக்குப் பயன்படும். உடம்பு பிணம் ஆன பிறகு பணமோ, போகப் பொருள்களோ எதுவும் நமக்குப் பயன்படுவது இல்லை. "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே' என்று பட்டினத்தார் சொல்வார். நம்மோடு உடம்பிரண்டு, உயிர் ஒன்றாகக் காதல் செய்து வாழ்ந்த மனைவியோ இந்த உடம்பு பிணம் ஆனவுடன் இதைக் கண்டு அஞ்சுவாள். அவள் இந்த உடம்பை எடுத்துப் போவதைக் கண்டு அலறுவாளே ஒழிய, "நானும் வருகிறேன்' என்று சொல்ல மாட்டாள். வீதியில் விழுந்து, மார்பில் அடித்துக் கொண்டு அலறுவதோடு நின்று விடுவாள். “விழி அம்பொழுக, மெத்திய மாதரும் வீதிமட்டே." நம்மிடம் பல காலம் அன்பு செய்த அன்பர்களும் மைந்தர் களும் சுடுகாடு மட்டும் வந்து இந்த உடம்பைத் தீக்கு இரை யாக்கி விடுவார்கள். இரண்டு கைகளாலும் கண்களைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழும் மைந்தர்கள் சுடுகாடு மட்டுந்தான் வருவாாகள. "விம்மி விம்மிஇரு, கைத்தலம் மேல்வைத்து அழுமைந்தரும் சுடுகாடுமட்டே." நாம் நம்முடைய உடம்போடு வாழும் காலத்திலும், இந்தப் |ற உடல் நீங்கி யாதனா சரீரத்தில் வாழும் காலத்திலும், மீண்டும் பிறவி பெறும் காலத்திலும் நம்மோடு தொடர்ந்து வரு வன புண்ணிய பாவ வினைகள் தாம். - "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே." இந்த இரண்டையும் நாம் துணைகளாகக் கொள்கிறோம். உண்மையில் இவை துணை அல்ல. நமது யாத்திரை நீள்வதற்கு 130