பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நாம் இந்தப் பிறவியில் பல துன்பங்களை அடைந்து வருகிறோம். இவற்றிற்கு ஏதுவாக இருப்பவை முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள். முற்பிறவியில் படிந்திருக்கும் வாசனை இப்போது நம் மனத்தில் நின்று மேலும் தீயவற்றையே செய்யத் தூண்டுகின்றது. இனிமேல் என்ன பிறவி வருமோ என்பதும் நமக்குத் தெரியவில்லை. முந்திய பிறவியின் பயனாக நாம் படும் துன்பம் போதாது என்று இந்தப் பிறவியில் செய்த செயல்களின் பயனாக வேறு இந்தப் பிறவியில் துன்புறுகிறோம். இந்தப் பிறவியில் செய்யும் வினைகள் காரணமாக இனி வரும் பிறவியிலும் துன்பப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக் கிறோம். மூன்று காலங்களிலும் நமக்கு வினைகளே துன்பத்தைத் தருவனவாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் போக்குவதற்கு என்ன வழி முதலில் இந்தப் பிறவியில் வருகிற துன்பங்களைப் போக்க என்ன வழியென்று பார்க்கலாம். இறந்தகாலம், எதிர் காலம் ஆகியவைபற்றி இப்போதைக்கு யோசனை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு நாட்களாக நாம் பட்டினி என்று கவலைப்படுவதைக் காட்டிலும், நாளைக்கு யார் சோறு அளிப்பார்கள் என்று இன்று யோசிப்பதையும்விட, இன்று எங்கே சாப்பிடுவது என்ற யோசனைதான் முதலில் உண்டாக வேண்டும். பெரிய துணை நமக்குப் பகையாக இருக்கும் இரண்டு வினைகளும் நாம் செய்யும் செயல்களால் வருகின்றன. செயல்களைச் செய்யும் கரணங்கள் மூன்று நம்மிடம் உள்ளன. ஒன்று மனம். இரண்டு வாக்கு. மூன்று உடம்பு. மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றி னாலும் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்வன எல்லாமே புண்ணியத்திற்கும், பாவத்திற்கும் காரண மாக அமைகின்றன. உலக இயலில் ஈடுபட்டுப் பிரபஞ்சச் சேற்றில் உழன்று நாம் செய்கிற செயல்கள் யாவுமே, வரும் பிறவிகளுக்கு மூல வித்தாக முடிகின்றன. இந்தத் தவறான முறையை மாற்ற வேண்டுமானால் நம்முடைய பயணத்தில் போகிற வழியை முட்டுக்கட்டை போட்டு மாற்றுவதற்குத் தக்க துணை வேண்டும். உலகத்திலுள்ள மக்கள் யாரும் நமக்குத் 132