பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை துணையாக இருக்க முடியாது என்பதை முன்பே பார்த்தோம். நமக்குத் துணையாக இருக்கத் தக்கவன் ஒருவன்தான். இறைவனே நம்முடைய உயிர்ப் பயணத்தை முடிவுகட்டுவதற்கு ஏற்ற வகையில் அருள் புரிவான். வினைகள் செய்தவனுக்கு அவற்றின் பயன்களை உடனே மாற்றி முத்தி தருவது என்பது இயலாத காரியம். தவறு செய்தவன் அதற்குரிய தண்டனையை அநுபவிக்கத்தான் வேண்டும். நாமோ ஒரு பிறவி, இரு பிறவி அல்ல, பல பிறவிகளில் தவறு செய்து கொண்டு வருகிறோம். இனிமேல் தவறு செய்யாமல் நல்ல பிள்ளையாக வாழ்வதற்கு அவன் திருவருள் துணை இருக்கவேண்டுமென்று நினைந்து முயற்சி செய்யலாம். ஆனால் அவனோடு தொடர்பு வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதன்று. மூன்று கரணங்களின் தொடர் பினால் நாம் உலகத்தில் வாழ்கிறோம். அவனோ கரணம் கடந்த பெரியவனாக இருக்கிறான். அவன் துணையை நாம் எப்படிப் பெறுவது? உருவமும் பெயரும் இந்த யோசனை ஆண்டவனுக்கே தோன்றியிருக்கின்றது. நம்முடைய அறிவினால் நாம் ஏதேனும் தெளிவு பெற வேண்டு மென்று முயன்றோமானால் அந்த முயற்சிக்கு முடிவே இராது. ஆனால் ஆண்டவனே வினையில் உழன்று வாழும் உயிர்க் கூட்டங்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்ற கருணையினால் நமக்கு ஏற்ற வகையில் சில நலங்கள் பண்ணியிருக்கிறான். நாம் செய்கிற பிழைக்காகத் தான் தன்னுடைய உயர்ந்த நிலையில் இருந்தும் இறங்கி வருகிறான். கண்ணுக்கும், கருத்துக்கும் அப்பாற்பட்டவனாக இருந்தும் உயிர்க் கூட்டங்கள் உடம்போடு வாழ்வதனால் அவர்களுடைய கண்ணுக்கும் கருத்துக்கும் பொரு ளாகத் திருவுருவங்களையும் திருநாமங்களையும் பெற்றிருக்கிறான். கண்ணின் செயல் உடம்பாகிய கரணத்திற்குத் தலைமையான அங்கம் தலை. அந்தத் தலையில் முக்கியமான உறுப்பு, கண். ஞானேந்திரியங் களுக்குள் அது மிகவும் சிறந்தது. உடம்பினால் செய்ய வேண்டிய காரியங்கள் பலவானாலும் முக்கியமாக நம்முடைய கண்ணைப் 133