பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பாதுகாத்துக் கொண்டு, நல்ல முறையில் அதைப் பயன் படுத்தினால் உடம்பாகிய கரணத்தினால் செய்யும் பாவங்களைக் குறைத்துக் கொள்ளலாம். இதற்காகவே ஆண்டவன் திருவடிவம் கொண்டிருக்கிறான். நம்முடைய உடம்பில் கண் எப்படி முக்கியமோ அது போல ஆண்டவனுடைய திவ்யமங்களத் திருமேனியில் திருவடி முக்கியம். அவனுடைய பாதங்களை நாம் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன் அந்தப் பாதங்களின் பேரழகை இரண்டு கண்களாலும் முகந்து உண்ண வேண்டும். புறத்தில் நம்முடைய பார்வைக்குப் பொருளாக அவன் விக்கிரகத் திரு மேனி கொண்டு எழுந்தருளுகிறான்.அந்தத் திருவுருவத்தைக் கண்ணினால் பசியோடு கண்டு நீருகுக்க வேண்டும். காணுவதும் நீருகுப்பதும் கண்களின் வேலை. பல பல பொருள்களைக் கண்டு கண்டு நம்முடைய கண்கள் தவறான வழியில் சென்று அழுக்கை ஏற்றிக் கொண்டிருக் கின்றன. நம்முடைய கண், வலி இல்லாத கண்ணைப் போலத் தோன்றினாலும் பிரபஞ்சச் சேற்றிலே உழன்று வலி பெற்றிருக்கி றது. காமாலைக் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாகத் தோற்றுவது போல நம்முடைய கண்ணுக்குப் பிரபஞ்சம் முழுவதும் பேதமய மாகத் தோன்றுகிறது. இதுவே ஒரு வியாதிதான். எங்கும் நீக்கமற நிற்கும் கடவுளைக் காணவேண்டியிருக்க, வேறு வேறு வகை யாக மாயா சொரூபமான பிரபஞ்சத்தைக் கண்டு கண்டு அதுவே காட்சி என்று அமைந்திருக்கிறோம். இது ஒரு வகையில் மஞ்சள் காமாலை; ஒரு வகைக் கண் வலி. கண் வலி வருமானால் நந்தியாவட்டை போன்ற மலர்களைக் கண்ணில் ஒற்றிக் கொள் ார்கள். பிரபஞ்சச் சேற்றிலே அழுந்திய பொருள்களை எல்லாம் ண்டு நோய் பெற்ற கண்ணுக்கு ஆறுதல் உண்டாக வேண்டு ானால் ஆண்டவனுடைய பாதங்களைத் தரிசனம் செய்ய வண்டும். அதற்காகவே அவன் தன்னுடைய பாதங்களை மிக மெல்லிய மலர்களைப் போலக் காட்டிக் கொண்டிருக்கிறான். 'கண்ணிணைநின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி" என்பர் மணிவாசகர். அவனுக்கும் இரண்டு திருவடிகள்; நமக்கும் இரண்டு கண்கள். அதன் பாதங்களை முதலில் தரிசிக்க வேண்டும். அவ 134