பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை அகரமும், ரு என்பதில் உகரமும், மு என்பதில் மகரமும் அமைந்திருக்கின்றன. பிரணவ எழுத்தின் பகுதிகளோடு வேறு சில பகுதிகளும் சேர்ந்து முருக என்ற நாமம் அமைந்திருக்கிறது. மந்திரத்தை மறைத்துச் சொல்வது மரபு. முருக நாமத்தைச் சொல்லிச் சொல்லி உள்ளம் குளிர்ந்து இன்புறுவது பக்தர்களுடைய இயல்பு. இங்கே அருணகிரியார், - மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் i. என்றார். முருகா என்பது ஒரு நாமந்தான். ஆனால் அதை நாமங்கள் என்று பன்மையினால் கூறுகிறார். முருகா என்பது ஒரு பெயராக இருந்தாலும் அது பல பெயர்களின் பொருளை உடையது. ஆகவே அதை ஒருமுறை சொன்னாலும் பல பெயர்களைச் சொன்னதன் பயன் உண்டாகும். பல நாமங்களின் பெருமை எல்லாம் தன்மாட்டு உடையது ஆகையால் அதனை, 'நாமங்கள் என்று பன்மையினால் சொன்னார். நாமத்தின் சிறப்பு இறைவனுடைய திருவருளில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை உடையவர்கள் அவன் திருவுருவத்தைக் கண்களால் கண்டு இன்புற்று, இடைவிடாமல் அவன் நாமத்தை ஒதவேண்டும். இறைவனுடைய உருவத்தைக் காட்டிலும் நாமத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. நாம் கோயிலில் பார்க்கிற உருவம் இறைவனுடைய தேசோமயமான உருவம் அன்று; அதனை நினைப்பூட்டுகின்ற அடையாளம். எங்கேயோ இருக்கிற ஒரு பெண்ணின் படத்தை ஓர் இளைஞன் பார்த்தால் அந்தப் பெண்ணின் மூக்கு, விழி முதலியவற்றின் அமைப்புக்களை மாத்திரம் உணரலாம். மேனி நிறம், பொலிவு முதலியவற்றை உணர முடியாது. ஆனாலும் அந்தப் படத்தை முதலில் கண்டு, பின்பு அவளையும் நேரில் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறான். அதுபோல, இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு மிகுதி யான தகுதி நமக்கு இல்லாமையினால், அவனுடைய திவ்ய தேசோமய விக்கிரகத்தை நம் மனத்தில் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். கண்களினால் கண்டு கருத்தினால் 13了