பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தோள் துணை ஆனால் இறைவனுடைய திருவருளால் நமக்கு ஒரு நலம் உண்டாகும். ஊழ்வினையை அடியோடு மாற்றிக் கொள்ள முடியாதென்றாலும் அதன் உறைப்பை மாற்றிக் கொள்ளலாம். அதற்குத்தான் பலமான துணை வேண்டும். முருகப்பெருமா னுடைய பன்னிரு தோள்களும் முன்பு செய்த பழிக்குத் துணை யாக நிற்கும் என்று அருணகிரியார் பேசுகின்றார். முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும். இறைவனுடைய பன்னிரு தோளும் மிகுந்த பராக்கிரமம் உடையவை; வீரத்தின் உறைவிடம். அவைகளே அசுரர்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்தவை. இந்தத் தோள்களின் வலிவினால் நம்முடைய பிராரப்தத்தின் வலி குறைய வேண்டும். ஞானிகளாலேயே போக்கிக் கொள்ள முடியாத பிராரப்தத்தின் உறைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அவற்றை யும்விட மிக்க வலிவாக பன்னிரு தோள்களின் நினைவு வேண்டும். அவை முன்பு செய்த பழிகளினால் உண்டான வாசனைக்கு மாற்றாக, பிராரப்தத்தின் உறைப்பைப் போக்குவனவாக, நமக்கு உதவும். இது சென்ற காலப் பயனை மாற்றுவிக்கத் துணை. வருங்காலத் துணை இப்படி நிகழ்காலத்திற்கு இரண்டு துணைகளும், சென்ற காலத்தின் பயனை மாற்றுவதற்கு ஒரு துணையும் இன்னவென்று சொன்னார். இனி வருங்காலத்தில் நமக்கு வருகின்ற பெரிய துன்பத்தை மாற்றுவதற்குத் துணை வேண்டும் அல்லவா? அந்தத் துன்பந்தான் மரணத் துன்பம். அதை நினைந்து பயப்படாத மக்களே இல்லை. இந்த உலகத்தில் நாம் சேமித்துக் கொண்டிருக் கிற துணைகள் எல்லாம் அங்கே உதவா என்பதை முன்னமேயே பார்த்தோம். மாணிக்கவாசகரும் ஆழ்வாராதிகளும் மரணம் வந்தால் இனி என்ன செய்வோம்’ என்று பயந்திருக்கிறார்கள். பிற மக்கள் யாருடைய துணையும் பயன்படாத வழி அது. ஆகவே அந்த வழியைத் தனிவழி என்று சொல்வார்கள். எல்லோ ருக்கும் அச்சத்தை உண்டாக்கும் வழி அது. 142