பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை மயில் அவனுடைய வேல் நம்முடைய உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கி ஒளி காட்டும். அவித்தையாகிய பகையைப் போக்கி இன்பத்தைத் தரும். அப்படியே அவனுடைய மயூரம் நம்முடைய மயக்கத்தை மாற்றும். மயில் பாம்புக்கு எதிரி. உலகத்திலுள்ள மாயையைப் பாம்பாகச் சொல்வது ஒரு வழக்கம். கயிற்றிலே பாம்பு தோற்றுவதைச் சர்ப்பப் பிராந்தி என்று சொல் வார்கள். அந்தப் பாம்பின் பயம் போக வேண்டுமானால் மயிலின் ஞாபகம் வரவேண்டும். கயிறு பாம்பு போலத் தோன்றி னாலே பயம் உண்டாகுமானால் உண்மையான பாம்பு தோன்றி னால் பயத்திலிருந்து தெளிய வழி இல்லை. ஆனால் மயிலின் துணை இருக்குமானால் உயிருள்ள பாம்புக்குக்கூட நாம் பயப் படமாட்டோம். மாயையினால் விளைகின்ற தீய இன்னல்களுக்கு ஆண்டவனுடைய மயிலைத் தியானம் செய்கிறவர்கள் அஞ்ச மாட்டார்கள். இறைவன் திருவுருவத்தை அமைத்திருக்கும் படங் களைப் பார்த்தால் இந்த உண்மை தெரியவரும். அவனுடைய வாகனத்தின் அடிக்குக் கீழே நாகம் இருப்பதைக் காணலாம். பாம்பை. மிதித்துக் கொண்டு அது நடனம் ஆடுகிறது. "வாளெயிற துற்றபகு வாய்தொறும் நெருப்புமிழும் வாசுகி எடுத்துதறும் வாசிக்காரனும்” என்று வேளைக்காரன் வகுப்பில் அருணகிரியார் பாடுகிறார். நஞ்சுடைய பெரிய பாம்பாகிய வாசுகியையும் அந்த மயில் எடுத்து உதறுமாம். மாயையின் அடையாளமாகிய பாம்பின் நஞ்சு நம்மைத் தொடராமல் மயூரம் நம்மைக் காப்பாற்றும். பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே, துணைகளின் வகை இந்தப் பாட்டில் மெல்ல மெல்ல எளிய உபாயத்திலிருந்து அரிய உபாயம் வரைக்கும் அருணகிரியார் கூறி உபதேசிக்கிறார். இறைவனுடைய திருவடிவம் முழுவதும் நாம் கண்டு மனத்தில் வைத்துக் கொள்வது என்பது எளிய செயல் அன்று. அவனுடைய மெல்லிய மலர்ப் பாதங்கள் இரண்டையும் கண்களில் வைத்து 145