பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத் துணை இதுவரைக்கும் சொன்னவற்றால் இறைவனுடைய வடிவக் காட்சியும், திருநாமத்தைச் சொல்வதும், அவனுடைய தியான மும் நம்முடைய மூன்று காலத் துன்பங்களையும் போக்கி என்றும் மாறாத இன்பத்தைத் தரும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காஎனும் நாமங்கள் முன்செய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலும்செங் கோடன் மயூரமுமே. (நம்முடைய கண்களுக்குத் துணையாக இருப்பவை திருச்செங் கோட்டிலுள்ள முருகனுடைய மென்மையான மலரைப் போன்ற திருவடிகள்; உண்மை சிறிதும் குன்றாத மொழிக்குத் துணையாக இருப்பவை முருகா என்னும் திருநாமங்கள். முன் பிறவிகளில் செய்த தீய செயல்களுக்குத் துணை அவனுடைய பன்னிரண்டு திருத்தோள்களும் ஆம். யாவரும் பயந்த தனி வழியாகிய மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க் கைக்குத் துணை அவனுடைய வடிவேலும் மயிலும். விழிக்குத் துணை, விழிக்கு உண்டாகும் இடையூறுகளை நீக்கிப் பாதுகாப்பது. மொழியைத் தீய வழியில் செல்ல விடாமல் பாதுகாப்பவை நாமங்கள். பழிக்குத் துணை என்றது பழிக்குக் காரணமாகிய பாவங்களால் உண்டாகும் தீங்குகளினின்றும் பாதுகாக்கும் துணை என்றபடி. தனி வழிக்குத் துணை என்பது தனி வழியில் நேரும் துன்பங்கள் நம்மைச் சாராமல் காக்கும் துணை என்றபடி. மெய்ம்மை - உண்மை. மயூரம் - மயில்.) 147