பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் நூலும் அதிகாரியும் ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முக்கியமாக மூன்று முறைகளைப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். சுருதி, யுக்தி, அநுபவம் என்பவை அவை. சுருதி என்பது பெரிய வர்கள் சொன்ன நூல்கள். யுக்தி என்பது நம் பகுத்தறிவினால் அறிந்து தெளிவது. அநுபவம் என்பது நம் வாழ்க்கையில் நாமே தெரிந்து கொள்வது. இந்த மூன்றில் இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு நம் யுக்தி பயன்படுவது இல்லை. நமக்கு அநுபவமும் இல்லை. ஆகையால் அவன் திருவருள் அது பவத்தைப் பெற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டும். அவர்கள் சொல்வன நூல் வடிவில் இருக்கின்றன. நூல்கள் எல்லாமே நமக்குப் பயன்படும் என்று சொல்வதற்கில்லை. பெருமக்கள், யார் யாருக்கு எந்த எந்த நூல் பயன்படுமோ அந்த அந்த நூலைப் படித்துப் பயன் பெறட்டும் என்று எழுதி வைத் திருக்கிறார்கள். எல்லா நூல்களையும், எல்லோரும் படித்துப் பயன்பெற முடியாது. பொதுவாக, நூல்களைப் படிப்பதற்கு முன்னால் இந்த நூல்களைப் படிப்பதற்குரிய அதிகாரி இன்னார் என்ற வரையறை உண்டு. மருத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியவன் சோதிட நூலைப் படித்துப் பயன் இல்லை. யோகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவன் காம சாஸ்திரத்தைப் படித்துப் பயன் இல்லை. நூல் நல்லதாக இருந்தாலும் அதனைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் படித்தால் அவர் களுக்குத் தீய பயனே உண்டாகும். நூல்களால் தெரிந்து கொள்வன நமக்கு அநுபவத்தை உண்டாக்குவதில்லை. அவை வழியைக் காட்டும். அந்த வழியில் சென்று அநுபவத்தை ஊட்டுவதற்குரிய குருநாதனைத் தேடித் தலைப்பட வேண்டும். முயற்சியும் குருவும் ஒர் ஊரில் ஒருவர் இருக்கிறார். அவரைக் காண வேண்டும் என்று போகிறோம். அந்த ஊர் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, அவர் உள்ள தெருவைத் தெரிந்து கொண்டு, அந்தத் தெருவில் அவர் வாழும் வீட்டைத் தெரிந்து கொண்டு, அவர் க.சொ.V-11 151