பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பெயர் முதலியவற்றைத் தெரிந்து கொள்கிறோம். ஊருக்குச் சென்று, தெருவைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டையும் அடைந்து விடுகிறோம். ஆனால் அந்த வீட்டுக்குள் போகவேண்டுமென் றால் வீட்டுக்குள்ளே இருப்பவர் கதவைத் திறந்தாலன்றிப் போக முடியாது. ஊரை மூடுவார் யாரும் இல்லை. தெருவை மூடுவார் யாரும். ஆனால் வீட்டுக்கு உடையவன் தன் வீட்டைத் தாழ்ப் பாள் போட்டுக் கொண்டிருந்தாலும், பூட்டிக் கொண்டு வெளி யில் சென்றிருந்தாலும் அவனைக் காண முடியாது. வீட்டுக்கு வரும் வரைக்கும் நம்முடைய முயற்சி பயன்படுகிறது. அதற்கப் பால் நம் முயற்சி மாத்திரம் இருந்தால் போதாது. வீட்டுக்கு உடையவன் கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். கதவைத் திறந்து வரவேற்பவரே குரு. ஆண்டவன் திரு வருளை அடைவதற்கு முன்பு சரியை முதலிய சோபானங்களைக் கடந்து செல்கிறோம். அப்படிச் செய்தால் நல்ல குருநாதனுடைய காட்சி கிடைக்கும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றைத் தரிசிப்பதும் குருநாதனுடைய அருளைப் பெறுவதற்காகத்தான். ஊரைத் தேடி, தெருவைத் தேடி, வீட்டைத் தேடுகின்ற முயற்சி களைப் போன்றன. அவை. கதவு மூடி இருக்கும்போது நாம் வலியப் போய்த் தட்டிப் பயன் இல்லை. நாம் போனவுடனே உள்ளே இருப்பவன் தாழைத் திறந்து வந்தால் நம் பாக்கிய மன்று நினைக்க வேண்டும். அப்படி இல்லாமல் கதவைத் தட்டினால், கை பலமாக இருந்தால் கதவு உடைந்து போகும்; கதவு பலமாக இருந்தால் கை வீங்கிப் போகும். இரண்டும் கூடாது. ஆனால் குருநாதன் நம்பால் கருணை கூர்ந்து தாழைத் திறக்க வரும் சமயத்தில் சென்றால் கதவு திறந்து உள்ளே நுழையலாம். அல்லது கதவு திறக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டும். நம்முடைய முயற்சியோடு குருநாதனுடைய கருணையும் சேர்ந் தால்தான் நமக்கு நல்ல பயன் உண்டாகும். ஒருவரைக் காண்பதற்காக ஆயிரம் மைல்கள் கடந்து டெல்லி யிருந்து ஒருவர் வருகிறார். நண்பர் ஊரில் இருப்பார், வீட்டில் இருப்பார் என்று எண்ணிக் கொண்டு ரெயிலை விட்டு இறங்கி டாக்ஸி வைத்துக் கொண்டு வேகமாக டெல்லிக்காரர் வருகிறார். i52