பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 இதற்காகத் தியானம் முதலியன செய்ய வேண்டும். சரியை, கிரியை, யோகம் என்று மூன்று படிகளைச் சொல்வார்கள். அந்த யோகம் ஞானம் என்ற லட்சியத்தை உடையது. யோகத்திற்கு மேலும் ஞானம் என்ற படி இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். யோகத்தை முடிந்த முடிபு என்று கொள்ளக்கூடாது. ஞானிகள் அநுபவமாகிய கடைசிப் படியை மிதிக்கிறார்கள். யோகத்தில் மட்டும் முழுப் பயன் அடைய முடியாது. இறை வனுடைய நினைவு இல்லாமல் செய்கிற யோகம் பயன் படாது; ஞானமும் பயன்படுவதில்லை. இடையே வரும் கிளுகிளுப்பு யோகத்தைத் தொடங்கும்போது இறைவனுடைய திரு வருளைப் பெறவேண்டும் என்ற நினைவோடுதான் பலர் தொடங்கு கிறார்கள். யோகம் செய்வதனால் ஒருவகையான வலிமை உண் டாகும். இடையே சில வகையான கிளுகிளுப்புகள் உண்டாகும். அவற்றை அநுபவிக்கும்போது, இவையே யோகத்தினால் உண் டாகும் பயன் என்று சிலர் ஏமாந்து போகிறார்கள். என்றைக்கும் மாறாத இன்பத்தை, இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெற வேண்டும் என்ற நினைவு போய்விடும். வெளி ஊருக்குப் போய் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு மீட்டும் சொந்த ஊருக்கு வந்து மனையாளோடும், உறவினர்களோடும் வாழ வேண்டும் என்று ஒருவன் நினைக் கிறான். யாவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியூருக்குப் போகிறான். அங்கே போய்ப் பணம் சம்பாதிக்கிறான். அந்த ஊரில் ஒருத்தியுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அங்கே வீடு கட்டிக் கொண்டு அவளோடு வாழ்கிறான். அவன் செய்வது அறம் ஆகாது. அதுபோலவே யோகம் என்ற ஏணியை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருவருள் இன்பமாகிய லட்சியத்தை அடைய வேண்டும். அந்த அநுபவம் கிடைப்பதற்கு முன்னால் யோக நிலைகளில் பல வகை அநுபவங்கள் ஏற்படும். சாமானிய மனிதனுக்குக் கிடைக்காத அநுபவங்கள் அவை. யோகத்தில் மாத்திரம் அல்ல. பக்தி முதலிய நெறிகளிலும் இப்படி இடை யிடையே சில உயர்ந்த அநுபவங்கள் கிடைக்கும். அந்த 士54