பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பரப்படுத்துவது போலச் செய்து கொண்டிருப்பார்கள். அப்படி யோகாசனம் செய்கிறவர்களைப் பார்த்து இரங்கி இதைப் பாடி யிருக்க வேண்டும் அருணகிரியார். பலவிடங்களில் யோகிகளைப் பார்த்து அவர் இரங்குகிறார். அசட்டு யோகி திருப்புகழில் ஒரு பாட்டில் பின்வருமாறு சொல்கிறார். 'அநித்தமான ஊன்நாளும் இருப்பதாக வேநாசி அடைத்துவாயு ஓடாத வகைசாதித் தவத்திலேகு வால்மூலி புசித்துவாடு மாயாச அசட்டுயோகி ஆகாமல்.’ யோகம் பண்ணுகிறவர்கள் என்ன சொல்கிறார்கள்? “யோகம் செய்தால் இந்த உடம்பு சாகாது. நரை திரை போய்விடும்; கருமை மறையாது; மூப்பு அண்டாது; கண் ஒளி மங்காது. பல காலம் சித்தர்கள் வாழ்கிறார்கள்' என்று சொல்கிறார்கள். மூக்கைப் பிடிக்கிற அனைவருமே சித்தர் ஆகிவிட முடியாது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இந்த உடம்பு என்றைக் காவது நிச்சயமாக மறைந்துவிடும். சோற்றைப் புசிக்கும்போதே உடம்பு சாகாமல் இருப்பது இல்லை. வெறும் காற்றைப் புசித்து உடம்பு சாகாமல் இருக்கும் என்றால் அது வேடிக்கை அல்லவா? ஐந்து பூதங்களின் சம்பந்தத்தினாலானது இந்த உடம்பு. இதை யோகம் முதலியவற்றாலும், மருந்து மூலிகைகளினாலும் நெடுங்காலம் வாழும்படி செய்யலாம். ஆனால் சாவாமல் செய்ய மடியாது. எந்தப் பொருளுக்குத் தோற்றம் உண்டோ அந்தப் பாருளுக்கு நிச்சயமாக மரணம் உண்டு. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்று சுந்தரர் சொல்கிறார். உடம்பை நெடுங்காலம் நீடித்து வைக்கிற வழி தெரிந்த ஒரு சித்தர் இருக்கிறார். ஐந்து பூதங் களினாலான பாண்டமாகிய இது மூல ஐந்து பூதங்களும் மாய்கிற பிரளய காலத்தில் மாய்ந்து விடும் என்று சொல்ல வேண்டிய தில்லை. ஆகவே பூதங்கள் எல்லாம் அழியும் மட்டும் அந்தச் சித்தர் இந்த உடம்போடு இருக்கலாம். அதற்குமேல் இருக்க இயலாது. அநித்தியமான இந்த ஊன் எப்போதும் இருக்கும் 162