பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் என்று எண்ணி, வாயுவை அடைத்து ஓடாத வகை செய்து, அதனால் உண்டாகிற வெப்பத்தை மாற்றுவதற்காக பல மூலிகை களைப் புசித்து வாடுகின்ற ஆயாசத்தை உடைய அசட்டு யோகி' என்று மேல் சொன்ன திருப்புகழில் அவர்களைப் பரிகசிக்கின்றார். உடம்பைப் பலமுடையதாகச் செய்வது அவசியம். அதற் காக ஒரளவு பிராணாயாமம் செய்து உடம்பைச் சுத்தமாக வைத்திருக்கத்தான் வேண்டும். ஆனால் இந்த உடம்பை வலிமை யுடையதாக வைப்பதற்குக் காரணம் இறைவனுடைய திரு வருளைப் பெறும் கருவியாக இது இருப்பதுதான். 'உடம்பினுள் உத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யான்இருந் தோம்புகின் றேனே" என்பர் திருமூலர். உடம்பினால் அடையும் பயனைப் பெற்று விட்ட பிறகு இந்த உடம்பினால் எதுவும் பயன் இல்லை. இந்த உடம்பு என்றைக்கு நழுவும் என்று அதன் பிறகு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் பெரியவர்கள். கரும யோகி வேறு ஒரிடத்தில் அருணகிரியார் இத்தகைய யோகிகளைக் கர்ம யோகிகள் என்று சொல்கிறார். கீதையில் சொல்கிற கர்மயோகம் அன்று. யாராவது தவித்தால் கர்மம் என்று நாம் சொல்கிறோம். பழைய பிறவியில் செய்த பாவத்தின் பயன் என்ற கருத்திலேயே அப்படிச் சொல்கிறோம். 'அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போய்வாயு அடையமீளில் வீடாகும் எனநாடி அருள்பெறா அநாசார கருமயோகி ஆகாமல் அவனிமீதில் ஓயாது தடுமாறும் உடலம்வேறு யான்வேறு கரணம்வேறு வேறாக உதறிவாச காதீத அடியூடே உருகிஆரி யாசார பரமயோகி ஆமாறுன் உபய பாத ராசீவம் அருள்வாயே." உடல்வேறு, நான் வேறு, கரணங்கள் வேறு என்று ஆராய்ந்து, அவற்றில் பாசம் வைக்கக் கூடாது. பெரியவர்கள் வீடு வேண்டு மென்று கருதி அநித்தியமான உடம்பில் ஆசை வைக்கமாட்டார் i83