பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 கள். யோகிகளோ இதனிடத்தில் பேராசை வைத்துக் கொண்டிருப் பார்கள். அதற்காக மூலிகைகளையும், தங்க ரேக்குகளையும் உண்பார்கள். இந்த அநாசாரக் கர்மயோகிகளுக்கு உடம்பைப் பேணுகின்ற சிற்றின்பத்தில் ஆசை இருக்கிறது என்று சொல்ல வேண்டும். உடம்பை வேறு வகையில் பேணி இந்திரிய சுகத்தை வளர்க்கின்ற மக்களுக்கும் இவர்களுக்கும் பல வகையில் பொதுமை உண்டு. உடல் வேறு, நான் வேறு, கரணம் வேறு என்று தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து அவற்றின்பால் ஆசை வைக்காதிருக்க வேண்டும் என்று அருணகிரியார் வேண்டுகிறார். 'வாசகாதீத அடியூடே உருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன் உபயபாத ராசீவ மருள்வாயே." மனம் இரண்டு விதத்தில் அழிந்து போகும். அதைக் காற்றாக்கி விடலாம்; அல்லது நீராக உருக்கிவிடலாம். யோகம் செய்பவர்கள் இதனைக் காற்றாக எண்ணி அடைத்து வெளியில் போகாமல் நிறுத்த முயல்கிறார்கள். சரியானபடி அடைத்து நிறுத்தாவிட்டால் எங்காவது பிய்த்துக்கொள்ளும். ஆனால் அன்பர்கள் இறைவன் குணங்களில் உருகி உருகி மனத்தை இல்லை ஆக்குகிறார்கள். 'ஆண்டவனே! வாக்குக்கு அப்பாற்பட்டு இருக்கிற உன் னுடைய திருவடி மலரை எண்ணி உருகி மனம் அற்றுப்போன ஆரிய ஆசார பரம யோகிகள் இருக்கிறார்களே. அவர்களுக்குக் சிடைக்கின்ற நிலை எனக்கு வேண்டும்' என்று அருணகிரியார் வண்டுகிறார். - 'உருகி ஆரியாசார பரம யோகி யாமாறுன் உபயபாத ராசீவ மருள்வாயே." அவர்களும் யோகிகள்தாம். மனத்தை வென்றவர்கள் யாவருமே யோகிகள். இப்போது யோகி என்று சொன்னால் ஹடயோகம் செய்கிறவர்களையே நினைக்கிறோம். ஆனால் பக்தி செய்கின்ற வனும் யோகிதான். அவனைப் பக்தி யோகி என்று சொல்வது வேதாந்த சம்பிரதாயம். பக்தி யோகி, கர்மயோகி, ஞானயோகி என்று யோகிகளைப் பிரிப்பார்கள். மூச்சை அடக்கிக் கஷ்டப் படுகிறவர்கள் ஹடயோகிகள், காற்றை அடைத்து உள்ளே கும்பித்து மனத்தை வேலை செய்யாமல் தம்பிக்கச் செய்து அப்புறம் இல்லாமல் செய்வது 164: