பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் எல்லோருக்கும் சாத்தியமான காரியம் அன்று என்பதை இது வரைக்கும் பார்த்தோம். எளிய வழி அப்படியானால் மனத்தை அடக்காமல் அதன் போக்குப்படி விட்டுவிடலாமா? இறைவன் திருவுருவை மனத்தில் கொள்ள வேண்டும். தியானம் சித்திக்க வேண்டும் என்றால் அதற்கு யோகத்தை அன்றி வேறு வழி இருக்கிறதா? நிச்சயமாக இருக் கிறது. யோகத்தைவிட மிக எளிதிலே இறைவன் திருவருளைப் பெறுவதற்கு ஏற்ற வழி உண்டு. அதுதான் பக்தி. மனம் இறை வனுடைய திருத்தாள் நினைவினால் உருகிவிட்டால் மனம் இல்லாமல் போய்விடும். நம்முடைய மனத்தில் அவனுடைய திருவடி மலர்களைப் பதித்துத் தியானம் செய்ய வேண்டும். அப்படித் தியானம் செய்கின்ற நிலை எனக்கு வரவேண்டும் என்று அருணகிரியார் இந்தத் திருப்புகழ்ப் பாட்டில் வேண்டுகிறார். 'உபயபாத ராசீவம் அருள்வாயே." தாயுமானவர் கூற்று தாயுமானவர் மனம் அற்ற தூய பரிசுத்த நிலை அடை வதற்குப் பலபல இடங்களுக்குச் சென்று ஒடி அலைந்தார். எந்த யோகிகளைக் கண்டாலும் அவர்களிடத்தில் ஏதாவது உண்மை இருக்குமோ, அநுபவம் இருக்குமோ என்று எண்ணி ஏங்கி, அவர்களை நாடிச் சென்று முடிவில் உண்மையான அநுபவம் எங்கும் தட்டுப்படாமல் அலைந்தார். அப்படி ஒடி ஒடி அலைந்த அவருக்கு அருணகிரிநாதரின் திருவாக்கில் பற்று விழுந்து விட்டது. கந்தர் அநுபூதியை அவர் பாராட்டினார். யோகிகளோடு சேர்ந்து யோகத்தையும் செய்தார் போலும். ஞான அநுபவ வாக்கைக் கண்டபிறகு அவற்றையெல்லாம் விட்டுவிட்டார். அதற்கு முன்பு அவர் தாம் பட்ட அவஸ்தையைப் பாடுகிறார். "சோற்றுத் துருத்திச் சுமைசுமப்பக் கண்பிதுங்கக் காற்றைப் பிடித்தலைந்தேன் கண்டாய் பராபரமே." இந்த உடம்பு சோற்றினால் வளர்ந்த துருத்தி போன்றது. உள்ளே காற்றை அடைத்து வயிறு உப்புவதனால் துருத்தி என்று சொன் 165