பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 னார். மூச்சை வாங்கி வெளிவிடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. தூங்கும்போது அது நன்றாகத் தெரியும். பெரிய வயிறு உடைய வன் ஒருவன் குறட்டை விட்டுத் தூங்கும்போது வயிற்றை மாத்திரம் கவனித்தால் போதும். துருத்தி உப்பி வடிவது போலத் தோன்றும் 'இந்தத் துருத்தி என்னும் சுமையைப் பலகாலம் சுமக்க வேண்டும் என்பதற்காகக் கண் பிதுங்கக் காற்றை உள்ளே அடைத்து அலைந்து திரிந்தேனே சோற்றுத் துருத்தியைக் காற்றுத் துருத்தியாக்கி அலைந்ததனால் ஒரு பயனும் காணவில்லையே பராபரமே!" என்று வருந்துகிறார் தாயுமானவர். மற்றொரு பாட்டில், "சும்மா இருக்கச் சுகம்.உதய மாகுமே இம்மாயா யோகமினி ஏனடா - தம்அறிவின் சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம நிட்டா சிறுபிள்ளாய் நீ.” கன்மநிட்டா என்றால் கர்ம யோகியே என்று பொருள். இவர்கள் செய்கின்ற மாய யோகத்தினால் பயன் இல்லை. அதனால் இன்பம் சாதிக்க ஒண்ணாது என்பது அவர் கருத்து. இப்படியெல்லாம் யோகத்தைப் பலபடியாக இழிவாகப் பேசிய பெருமக்களுடைய கருத்துக்களைப் பார்க்கும் போது, யோகத்தினால் இறைவனுடைய திருவருளை அடைதல் மிக மிக அரிது என்பது தெளிவாகும். வேறு வழி துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து அருத்தி உடம்பை ஒறுக்கில் என்னாம்? என்று கேட்கும் அருணகிரிநாதரை, "பின்னே என்னதான் செய் வது?" என்று நாம் கேட்கிறோம். "அங்கே போகாதே' என்று ஒரு குழந்தையைத் தடுத்தால், 'பின்னே எங்கே போவது? அதற்கு வழி என்ன?’ என்று அது கேட்கும். அப்படிக் கேட்கிற கேள்விக்கு அருணகிரிநாதர் விடை சொல்கிறார். சிவயோகம் என்னும் குருத்தை அறிந்து முகம் ஆறுடைக் குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர் முத்தி கைகண்டதே. 166