பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 விளக்கமாக இல்லாவிட்டால் பிறிதோரிடத்தில் விளக்கமாக இருக்கும். பெரிய நூல்களைப் படிப்பவர்களுக்கு இந்தக் கருத்து விளங்கும். சொல்லக் கூடியவற்றை ஒரே பாட்டில் சொல்லிவிட முடியாது. ஆகையால் அந்த அந்த ஆசிரியர்கள் தம் உள்ளக் கருத்தை அங்கங்கே வைத்திருப்பார்கள். நூல் முழுவதையும் படித்தால்தான் கவிஞன் இதயம் முழுவதும் தெரியும். சில பாடல்களைப் படித்துவிட்டுக் கவிஞன் இதயம் முழுவதும் கண்டுவிட்டவர் போலச் சிலர் ஆராய்ச்சி செய்கிறார்கள். அதனால் வருகிற தீங்குக்கு அளவேயில்லை. பெட்டியை எப்போதும் திறந்து போட்டிருக்கமாட்டார்கள். அதைப் பூட்டினால் அதன் சாவியை அந்தப் பெட்டியின் வாயிலே வைத்திருக்கமாட்டார்கள். சாவி வேறிடத்தில் இருக்கும். சாவியைத் தேடிப் பெட்டியைத் திறந்தால் அதன் உள்ளே இருக்கும் பொருள் இன்னது என்று தெரிந்து கொள்ளலாம். சட் டென்று போய் ஒரு சாமானை எடுப்பதாக இருந்தால், வெளியில் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம். பெட்டியில் வைத்துள்ள அருமையான பொருளைச் சாவியைத் தேடித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் அருணகிரியார் இந்தப் பாட்டில் சிவ யோகம் என்பதைச் சொன்னார். அதற்குச் சாவி இங்கே இல்லை. ஆறுமுகமுடைய குருநாதன் சொன்னான் என்று மாத்திரம் சான்னார். இதனைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நமக்குப் பாறுமையும், முயற்சியும் இருக்க வேண்டும். மிக அரிய உபதேச மாதலால் நமக்கு ஆர்வம் உண்டாக வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லி வைத்தார் என்றும் கருதலாம். சிவயோகத்தைப் பற்றித் தாம் வேறிடத்தில் சொல்லியிருப்பதை நாமே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளட்டுமே என்று சுருக்கமாகச் சொன்னார் போலும். நாம் கொஞ்சம் தேடிப் பார்க்கலாம். கந்தர் அலங்காரத்தைப் படிப்பவர்கள் திருப்புகழையும் கொஞ்சம் தேடிப் பார்த்தால் சிவயோக இலக்கணத்தை அங்கே அருணகிரியார் எவ்வாறு சொல்கிறார் என்பது தெரியவரும். ić8