பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவயோகம் சிவயோகம் திருப்புகழில் ஓரிடத்தில் சொல்கிறார். 'ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் - வெகுரூப அண்ட ராதிச ராசர முமுயர் புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொரு - வெயில் காலும் சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏகவடிவம தன்சொ ரூபம தாக உறைவது - சிவயோகம்." பஞ்சபூதங்களாகிய அடிப்படைத் தத்துவம் முதற்கொண்டு நாத தத்துவம் வரைக்கும் எல்லாத் தத்துவங்களும் ஒன்றன் விரிவு என்று கருதி, அந்த நிலையில் எல்லாவற்றையும் ஒன்றாக நினைந்து கொண்டு அநுபவித்து நிற்பதுதான் சிவயோகம் என்று. அந்தப் பாட்டில் சொல்கிறார். 'எல்லாம் ஒன்றுதான். இதனை நான் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன்' என்று ஒருவர் சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கும், நினைப்பதற்கும் தனித் திறமை வேண்டும். அப்படிச் சொன்னாலும் போதாது. எங்கும் இறைவன் இருக் கிறான் என்பதை நூல்கள் சொல்கின்றன. அமெரிக்கா கண்டம் என்று ஒன்று இருக்கிறது என்று ஒருவர் சொல்லிக் கேட்டும், நூல்களில் படித்தும் அறிந்தால், அது இருக்கிறதென்று உண்மையைத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அது எப்படி இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதுபோல இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை நூல்கள் சொல்வதைக் கேட்டு நாம் நம்புகிறோம். ஆனால் அதை அநுபவத்தில் உணருவது இல்லை. உலகிலுள்ள எல்லாவற்றையும் இறைவனாகவே காணவேண்டுமென்ற ஆசை உள்ளவன் முதலில் அந்த நினைவை மனத்தில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல அந்த நினைவில் ஈடுபட்டு உள்ளத்தை ஒன்றுபடுத்தினால் இறைவன் என்ற நினைவே மிக்கு நம்முடைய நினைவு குறைந்து போகும். இப்படி எல்லாம் மறைந்து ஏக வடிவம் ஆகியவனது நிலையைத் தான் சிவயோகம் என்று இந்தப் பாட்டில் அருணகிரியார் சொன்னார். 169