பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 'பசிக்கேற்ற உணவு எங்கே இருக்கிறது?' என்று தானே தேடி ஒடுவான். வாய் வேதாந்திகளோ தம்முடைய யாக்கை மாத்திரம் பலகாலம் வைரமாக இருப்பது போல எண்ணித் தம் அளவில் நிலையாமையை உணர்ந்து கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், அடிக்கொரு தரம், 'இந்த உடம்பு அழியக்கூடியதுதானே?" என்று சொல்வார்கள். அது மாத்திரம் அன்று. தம்முடைய உடம்புக்கு வேண்டிய உணவுகளை உண்ணும்போது, "ஆத்ம வஞ்சனை பண்ணக் கூடாது' என்றும் இவர்கள் பேசுவார்கள். உயிரை வைத்திருக்கிற உடம்பு அவர்களுக்கு ஆத்மாவாகிவிடும். தமக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம் என்று பேசுகின்ற போலி வேதாந்திகள் அவர்கள். செல்வம் நிலையாமை அடுத்தபடி, இந்த வாழ்க்கைக்கு இன்றியமையாதது செல் வம். உலகம் முழுவதும் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஒரிடத்தில் செய்த உழைப்பின் பயன் பிறிதொரு காலத்தில் வேறு இடத்தில் வந்து உதவும் படியாகச் செல்வம் செய்கிறது. அதுவும், நாணயம் வந்துவிட்ட இந்தக் காலத்தில், நம்முடைய உழைப்பின் சாரத்தை எல்லாம் பணமாகச் சேர்த்துக் கொள்கிற உபாயம் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மனிதனும் ரூபாய்,அணா, பைசாக் கணக்கில் தன் உழைப்பின் சக்தியைப் கணக்கிட்டு ஈட்டுகிறான். அறிவாளி பணம் சேர்க்கிறான். உழைப் பாளி பணம் சேர்க்கிறான். வியாபாரிகளும் பணம் சேர்க்கிறார் கள். பண்டமாக இருந்தால் ஒரு காலத்திற்கு மேல் வைத்துக் கொள்ள முடியாது. அவற்றை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பழங்காலத்தில் பெரிய பணக்காரர்களாக இருந்தவர்கள் நிறைய நெல் முதலிய பண்டங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அவற்றைச் சில ஆண்டுகளில் தானத்திலும், தர்மத்திலும் செலவிட்டுப் புதிய முயற்சியில் ஈடுபடுவார்கள். நாணயம் என்ற உருவத்தில் உள்ள பேய் வந்த பிறகு தம்முடைய உழைப்பை எல்லாம் நாணயமாக்கிக் கொள்ள முயலுகிறார்கள் மக்கள். எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் அது செல்லும்; ஆதலால் பிறருக்கு அளிக்காமல் நாணயத்தைச் சேர்த்துக் கொள் 8