பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை 1 மங்கல வாசகம் சென்ற முறை ஹடயோகிகளைப் பார்த்து, எம்பெருமான் திருவடியிலே பக்தி இல்லாமல் உடம்பை வருத்தி யோகம் செய்து பயன் இல்லை என்று சொல்லும் கருத்தையுடைய பாட்டைப் பார்த்தோம். இப்போது பார்க்கப் போகிற பாட்டில் அருணகிரிநாத சுவாமிகள் அருமையான மங்கல வாசகம் ஒன்றைச் சொல்கிறார். மங்கல வாசகம் என்பது நல்லதைச் சொல்வது. நல்லதை இரண்டு வகையாகச் சொல்லலாம். நேர் முகமாகச் சொல்வது ஒன்று; மறைமுகமாகச் சொல்வது ஒன்று. பொல்லாதவர்களுக்கு நல்லதைச் சொல்லும்போது எதிர் மறை வாய்பாட்டிலே சொல்வது வழக்கம். நல்லவர்களுக்கோ உடன் பாட்டு வாய்பாட்டாலே சொல்வார்கள். நோயாளிக்கு நல்லதைச் சொல்ல வேண்டுமானால், நிறைய உண்டு வாழ்வாயாக' என்று சொல்லிப் பயன் இல்லை; 'உன்னுடைய நோய் தீர்ந்து விடுவதாக’ என்று சொல்வது முறை. கம்பர் கூறுவது கம்பர் இராமாயணத்தில் எதிர்மறை வாய்பாட்டிலே நல்லதைச் சொல்வதற்கு ஒர் உதாரணம் தருகிறார். இராமாயணத் தில் பலவிடங்களில் கதையின் திருப்பங்களுக்கு மூலகாரணமாக இருக்கிறவர்கள் பெண்கள். நல்ல பெண்கள், பொல்லாத பெண்கள் எல்லோருமே கதையின் போக்கிலேயே வருவார்கள். கூனி என்ற பெண் கைகேயியின் உள்ளத்தை முட்டுக்கட்டை போட்டுத் திருப்புகிறாள். அதனால் இராமன் அரசு இழந்து காட்டுக்குச் செல்கிறான். காட்டில் இருந்த இராமனிடத்தில்