பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை காமம் கொண்டு சீதைக்குத் துன்பம் செய்ய வந்தவள் சூர்ப் பனகை. அவள் இராமனிடத்தில் வந்தபோது அரக்கியின் கோலத்தில் வரவில்லை. அழகிய மடமகள் போல அஞ்சொலிள அன்னமென வஞ்சியென நடந்து வந்தாள். இராமன் அவளை வந்து வரவேற்றான். 'உன் வரவு நல்வரவு ஆகுக' என்று அவன் சொல்லலாம். ஆனால் அந்தப் பெருமானுடைய வாக்கில் ஒரு குறிப்பு இருக்கிறது. "தீதில் வரவாக திருநின்வரவு' என்கிறான். 'உன் திருவுருவத்தைப் பார்த்தால் திருமகள் மாதிரி இருக் கிறது. ஆனால் நீ வருகிற வருகையிலே தீது வருகிறது போல இருக்கிறது' என்கிற குறிப்பை வைத்து, "உன் வரவு தீது இல்லாத வரவு ஆகுக' என்று சொல்கிறான். நல்வரவு ஆகுக என்பதே இதற்குக் கருத்தானாலும் தீதுடைய வரவாக நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் குறிப்பாகக் காட்டிச் சொன்னான். அந்த வகையில் அருணகிரியார் நமக்கு உபதேசம் செய்கிறார். ஒரு தாழ்வு இல்லை என்று எதிர்மறை முகத்தால் மங்கல வாழ்த்தைச் சொல்கிறார். இவ்வாறு சொல்வதற்குப் பதிலாக 'வாழ்வு உண்டு' என்று சொல்லலாம். "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' என்று திருஞானசம்பந்தப் பெருமாள் பாடுகிறார். அப்படியும் சொல்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அருணகிரியார். தாழ்வு இல்லையே என்று எதிர்மறை முகத்தினால் நமக்கு உபதேசம் செய்கிறார். ஏன்? பலவகைத் தாழ்வு நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க லாம். நமக்கு எப்போதும் தாழ்விலேயே நினைப்பு. தாழ்ந்த எண்ணங்களும், தாழ்ந்த பேச்சும், தாழ்வான செயல்களுமே 175