பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நமக்கு இயல்பாக அமைந்தவை. ஒரு நாளாவது மனம் உருகி நல்லவராக இருந்தோம் என்பது இல்லை. எப்போதோ சில கணங்கள் நல்லவராக இருக்க முயன்று பார்க்கிறோம். ஆனாலும் இயற்கையாக உள்ள தாழ்ந்த நிலை நம்மை வந்து கப்பிக் கொள்கிறது. இருபது மணி நேரம் மகிழ்ச்சியுடன் இருந்தாலும் நாம் பெற்ற மகிழ்ச்சியைக் குறித்துத் திருப்தி அடையாமல் பெறாததை நினைந்து துக்கப்படுகிறோம். ஆயிரம் ரூபாய் நமக்கு வந்தது. அந்தத் தொகையில் இரண்டு ரூபாய் செலவழிந்து விட்டது. 998 ரூபாய் இருக்கிறதே என்று திருப்தி அடையாமல் இரண்டு ரூபாய் செலவழிந்துவிட்டதே என்று துயரம் அடைபவர் களே மிகுதி. இப்படி இல்லாததையும், பொல்லாததையும் நினைந்து துக்கப்படுபவர்கள் மனத்திண்மை இல்லாதவர்கள். அவர்கள் மனத்தில் தாழ்வு இருக்கிறது. நல்லது ஆனாலும் பொல்லாதது ஆனாலும் திண்மை உடைய நெஞ்சினருக்கு ஒன்றாகவே இருக்கும். தீங்கு அவர்களுக்குத் துன்பம் பயக்காது. பயத்தினால் மனம் தாழ்ந்து துன்பத்தை அடையும். நல்ல மனம் உடையவர்கள்கூடச் சில சமயம் அஞ்சுவது உண்டு. தமக்கு ஏற்ற துணை இல்லையே என்ற அச்சம் அவர்களுக்கு உண்டாகும். தவறு செய்பவர்களுக்கும் அவர்களுடைய செயல் மனத்திற்குள் துன்பத்தை உண்டாக்கும். 'தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்." அறியாமையினால் தீய செயலைச் செய்துவிட்டு அதை நினைந்து தாழ்வு வருமே என்று நாம் பயந்துகொண்டே இருக்கிறோம். நம்மிடத்தில் குறை ஒன்றும் இல்லை என்றால் நம்மை யாராலும் துன்புறுத்த முடியாது. நமக்குச் சிறந்த துணை இருக்கிறது என்ற திண்ணிய எண்ணம் யாரிடம் உண்டோ அவர்களுக்குப் பயம் இராது. எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள் என்ற நினை வினால் தைரியமும், அயலான் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவினால் பயமும் உண்டாகும். பிறரை நம்பி வாழ்ந்து, துன்பம் வரும்போது பிறரால் துன்பம் வந்ததென்று குழந்தையைப்போல வருந்துகிறோம். நர்ம் செய்கிற பிழைகளுக்குக் காரணம் பிறர் என்று நினைத்துக் 176