பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை கொண்டிருக்கிறோம். இதற்கு மாறாக நல்லனவற்றை நினைந்து அல்லாதனவற்றை மறக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று' என்பது திருக்குறள். பன்னாடை நாம் பன்னாடையைப் போல இருக்கிறோம். பன்னாடைக்கு நெய்யரி என்று பெயர். காட்டில் இருக்கிறவர்கள் அதைக் கொண்டு தேனை வடிகட்டுவார்கள். நெய் என்பது தேனுக்குப் பெயர். தேனைப் பன்னாடையில் விடும்போது தேனில் விழுந்த தூசி, வண்டு முதலியவைகள் அதில் தங்கி விடுகின்றன. இலக்கணக்காரர்கள் மாணவர்களுக்கு உபமானமாக இதை ஆண் டிருக்கிறார்கள். கடைநிலை மாணாக்கனைச் சொல்லும் போது, 'அவன் பன்னாடையைப் போன்றவன்' என்கிறார்கள். ஆசிரியன் சொல்கிற நல்ல பொருள்களை எல்லாம் விட்டு விட்டுத் தீய பொருள்களை மாத்திரம் ஏந்திக் கொள்கிற இயல்பு உடையவன் அதம மாணாக்கன். பன்னாடையின் இயல்பு அல்லவா இது? வேறு ஒர் இலக்கணக்காரர் நல்ல மாணாக்கனுக்குப் பன் னாடையை உபமானம் சொல்கிறார். பொல்லாத ஒன்றுக்கு உப மானமாகச் சொல்வதை நல்ல ஒன்றுக்கு உபமானமாகச் சொல் வது எப்படிப் பொருந்தும் என்று நமக்குத் தோன்றும். அவர் சொல்கிற மாதிரியே வேறு. பாத்திரத்திற்குள் நல்லனவற்றை எல்லாம் விட்டு விட்டு அல்லாதவற்றை வெளியில் தேங்கிவிடும்படி செய்கிறது பன் னாடை. நல்ல கருத்துக்களை உள்ளத்திற்குள் புகவிட்டு மற்ற வற்றைப் புறத்தே நின்றுவிடும்படி செய்கிறவன் நல்ல மாணாக் கனாம். - நல்லவற்றை நினைந்து பொல்லாதவற்றை மறக்க வேண்டும் என்பதை மாணாக்கன் நிலையிலும் வைத்துப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாமோ அதற்கு மாறாக இருக்கிறோம். பிறர் செய்த தீங்குகளை நினைந்து நல்லவற்றைக் கூடியவரையில் 181