பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்க்குமிழி கிறார்கள். பிறருடைய நாணயத்தைத் திருடிக் கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். ஓரளவு நாணயம் சேர்ந்துவிட்டால், இனி நாம் உழைப்பது எதற்கு என்று சோம்பேறிகளாகவும் ஆகிறார் கள். நாணயம் என்ற சனியன் வந்த பிறகு ஒரு வகையில் மனிதனுக்கு முயற்சி இருந்தாலும் மற்றொரு வகையில் தானம், தவம் என்ற உணர்ச்சி செத்துப்போய்ப் பேராசை மிகுதியாகி விட்டது. பணக்காரர்களுக்குச் சோம்பேறித்தனமும் உடன் பிறந்த இயல்பாகிவிட்டது. இப்படிச் சம்பாதிக்கிற செல்வம் ஓரிடத்தில் நிலை பெற்று நிற்கிறதா? அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, செல்வம் நிலையாக நிற்பது இல்லை. அது எப்போதும் உருண்டு கொண்டே இருக்கிறது. ஆற்றிலே நிரம்ப வெள்ளம் வந்தால் இரு கரையையும் தொட்டுக் கொண்டு ஒடுகிறது. பின்பு வெள்ளம் வடிந்து விட்டால் சில இடங்களில் மேடுகள் உண்டா கின்றன. இந்த ஆண்டு ஒரிடத்தில் மேடு இருக்கிறது என்று கண்டோமானால், அடுத்த வெள்ளத்தில் அந்த மேடு அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது; வேறு எங்கேயோ மேடு உண்டாகிவிடும். இதை உணர்ந்து, 'ஆறிடு மேடும் மடுவும்போ லாம்செல்வம்" என்று பெரியவர்கள் சொன்னார்கள். மேகம் வானத்தில் நிரம்பி யிருக்கிறபோது மின்னல் அடிக்கிறது. அது பளிச்சென்று தோன்று கிறது. ஆனால் அடுத்த கணத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைகிறது. நம்முடைய வாழ்க்கை என்கிற நீண்ட காலத்தைச் கொண்டு பார்ப்போமானால் செல்வமும் சிறு காலமே நின்று போய்விடுகிறதென்று உணரலாம். மின்னல் தோன்றி மறைவது போலவேதான் செல்வமும் தோன்றி மறைகிறது. நில்லாது செல்வம் பார்க்கும் இடத்து அந்த மின்போலும் என்பர். வெறும் வாய் ஞானம் பேசுகின்றவர்கள் இதையும் எடுத்துச் சொல்வார்கள். பிறருடைய செல்வதைப் பெற்றுக் கொண்டு இதைச் சொல்வார்கள். ஆனால் தம் அளவில் செல்வம் சேர்த்துக் கொண்டிருப்பார்கள். 'இறைவனுடைய திருவருளால்தான் செல்வம் சேருகிறது. அதற்கு நாம் தர்மகர்த்தாவாக இருக்க வேண்டுத்து