பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 மறந்து கொண்டிருக்கிறோம். நமக்கு உபகாரம் செய்கிறவர்களுக் குள் மிகவும் சிறந்தவன் ஆண்டவன். இப்போது நமக்கு நல்லது செய்கிறவர்கள் எல்லாப் பிறவிகளிலும் தொடர்பு உடையவர் களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இறை வனோ எல்லாப் பிறவிகளிலும் நம்மோடு தொடர்ந்து நின்று அருள் செய்கிறான். நமக்குத் தனு கரண புவன போகங்களை எல்லாம் கொடுக்கிறான். அத்தகைய் பெரு வள்ளலை நாம் மறந்துவிடுகிறோம். அழுத்தமாக நினைப்பது இல்லை. ஆண்டவனை நினைக்க வாய்ப்பு ஆண்டவனை நினைப்பதற்குரிய வாய்ப்பு நமக்கு இல்லை யென்று ஒரு காரணம் கூறலாம். ஆனால் அது உண்மையன்று. ஒவ்வொரு கணமும் ஆண்டவனை நினைப்பூட்டிக் கொள்வதற் குரிய நிகழ்ச்சி உலகில் நடக்கிறது. நாம் காணும் பொருள்கள் எல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டன அல்ல. இயற்கை யாக அமைந்த பலவற்றை இறைவன் உண்டாக்கியிருக்கிறான். மின்சார விளக்கை மனிதன் உண்டாக்கினான் என்ற நினைவு வரும் போது மனிதனின் செய்கையில் அகப்படாத சூரியனும் சந்திரனும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால் அமைக்கப் பட்டன என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அந்தச் சக்தியே இறைவன். அதைத் தெரிந்து கொள்வதற்குரிய அறிவும் நமக்கு இருக்கிறது. நம்முடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுது அவை இறைவனுடைய அருளால் நிகழ்பவை என்று ஊகித்து உணர்ந்து கொள்ளலாம். நம்முடைய அறிவுக்குப் புலப்படாத நிகழ்ச்சிகளைக் காணும்போது இறை வனுடைய நினைவு வர வழியுண்டு. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எத்தனையோ சம்பவங்கள் உலகத்தில் நிகழ்கின்றன. சிறிது அறிவைத் தூண்டிப் பார்த்தால் எல்லா வற்றையும் அடக்கி ஆளும் மகாசக்தி ஒன்று இந்த இயக்கங் களுக்கு எல்லாம் மூலகாரணமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த அறிவு நமக்கு எளிதில் வரும். ஆனாலும் அத்தகைய நினைப்பு நமக்கு உண்டாவது இல்லை. சில சமயங்களில் உணர்ந்தாலும் பாசி மூடிய குளம்போல விரைவில் மறதி வந்து மூடிக்கொள்கிறது. 182