பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 என்று அப்பர் சுவாமிகள் பாடினார். நம் நெஞ்சு ஆண்டவன் ஒளிந்து கொண்டிருக்கிற குகை போல் இருக்கிறது. அப்படி அல்லாமல் அவன் அரசு ஆளும் இடமாக இருக்க வேண்டும். நாம் சதா அவனை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். வேலை கொடுக்காத ஆள் சோம்பேறியாகிவிடுவான். அவன் இருப்பதும் நமக்குத் தெரியாது. இறைவனோ நம் உள்ளத்தில் இருந்தாலும் தனக்கு வேலை கொடுக்காதவர்களுடைய வீட்டில் சும்மா இருப்பான். அவனுடைய சைதன்யம் பயன்படாமல் போகும். அவனைத் தட்டி எழுப்பிப் புகழ்ந்து, நீ இந்த வேலையைச் செய் என்றால் சோம்பாமல், சோராமல் எப் பொழுதுமே வேலை செய்வான். அதற்காகவே அவன் நம் உள்ளத்தில் இருக்கிறான். அதனைத் தெரிந்துகொள்ளாமல் நாமும் தூங்கி, அவனையும் துரங்கச் செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அவன் நம் உள்ளத்தில் இருந்தும் அவனால் கிடைக்கும் பயனை நாம் அடையாமல் இருக்கிறோம். நம் உள்ளம் தூங்கும் மடமாக இருக்கிறது. அவன் நமக்கு முழுச் சைதன்யத்தைக் காட்டும் கோயிலாக நம் உள்ளம் இருக்கவேண்டுமானால் அவனை நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்' என்பது இந்த உண்மையைத் தனக்குள் அடக்கியிருக்கிறது. நமக்கு உபதேசம் செய்ய வருகிற அருணகிரிநாத சுவாமிகள் நாம் செய்யும் தீங்குகளை மாற்றி நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறார். நாம் நல்லவர்களாக இருந்தால், 'ஆண்டவனை நினைந்தவர்க்கு வாழ்வு உண்டு ' என்று சொல்லியிருப்பார்; அல்லது மறந்தவர்க்குத் தாழ்வு உண்டு என்று சொல்லியிருப்பார் நம்முடைய இயல்புகளை நன்றாக உணர்ந்து அவர் நாம் உய்ய வேண்டும் என்று கருதி எம்பெருமானை மறவாமல் இருந்தால் தாழ்வு உண்டாகாது என்று சொல்கிறார். சாகும் வரையில் சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே. 184