பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 நமக்கு வருகின்ற தீங்குகளைப் போக்கிக் கொள்வதற்கு அறம் செய்ய வேண்டும். நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். அதற்கு இத்தனை ரூபாய் ஆகும்” என்று பிறருக்கு உபதேசம் செய்து தம் பொருளைச் சேர்த்துக் கொள்கிற மக்கள் உலகத்தில் பலர் இருக்கிறார்கள். பிறருடைய செல்வத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தம்முடைய செல்வத்தை மாத்திரம் பாதுகாத்துக் கொள்கிறவர்களைவிட இவர்கள் இழிந்த மக்கள். உண்மையில் உயிர்களிடத்தில் அன்பு இருந்தால் தம்முடைய செல்வத்தையும் பிறருக்குப் பகிர்ந்து அளிக்கும் மனப்பாங்கு உண்டாகும். அந்த அன்பு இல்லாதவர்கள் பிறருடைய செல்வத்தைப் பற்றிக் கூறுகிறார்களேயன்றித் தம்முடைய செல்வம் எப்போதும் நிலை யானது என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள். வாசாஞானிகள் யாக்கையின் நிலையாமையையும், செல்வத்தின் நிலையா மையையும் பிறருக்குத் தம்முடைய உபதேசங்களாலும், விரி வுரைகளாலும், கதைகளாலும் எடுத்து விரிக்கின்ற பேர்வழிகள் உலகத்தில் மிகுதியாக இருக்கிறார்கள். எல்லோரும் குரு நாதர்களாக ஆக ஆசைப்படுகிறார்களேயொழிய மாணாக்கர்களாக இருக்க விரும்புகிறவர்கள் மிகவும் அருமை. தாம் உணர்ந்து கண்டுவிட்டால் அதனை அநுஷ்டானத்தில் நாமே கொண்டு வந்திருக்கிறோமா என்று அவர்கள் எண்ணிப் பார்ப்பது இல்லை. உணர்ந்தது ஒன்று; ஆனால் சொல்வது பத்தாக இருக்கும். உணர்ந்ததையே செயல் முறையில் கொண்டுவராதபோது தாம் சொல்வனவற்றையெல்லாம் எப்படிக் கொண்டுவருவார்கள்? பசித்து வந்தவன் - ஒருவர் தினந்தோறும், "என்ன உடம்பு வேண்டியிருக்கிறது? இது நீர்க்குமிழி போன்றது. இதைப் போய் ஒருவன் காப்பாற்றிக் கொண்டிருப்பானா?" என்று சொல்லிக் கொண்டு வந்தார். பணத்தைப் பற்றிப் பேச்சு வந்தால், "செல்வம் மின்னலைப் போன்றது. அது ஒரிடத்தில் தங்குவது இல்லை. அதற்கு ஆசைப் படலாமா?' என்று சொல்வார். ஒருநாள் அவருடைய வீட்டுக்கு ஒர் ஏழை வந்தான்; இரண்டு நாட்களாக உணவைக் காணாதவன் 1Ö