பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 யாளங்கள் சொன்ன பிறகு நாம் அவனை நினைந்து வாழலாம் என்பது அவர் கருத்து. ஆகையால் இந்தப் பாட்டைப் பலமுறை பாராயணம் பண்ணினால் அவனை மறவாத நிலை வரும் என்பதற்கு ஐயம் என்ன? சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை சாந்துணைப் போதும் மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. (செந்நிறமுடையவனை, கந்தப் பெருமானை, திருச்செங்கோ டென்னும் மலையில் எழுந்தருளியிருப்பவனை, சிவந்த கதிர்களை வீசும் வேலைத் திருக்கரத்தில் ஏந்தியவனை, செந்தமிழ் நூல்களை விரிவாகச் சொன்னவனை, விளக்கம் பெற்ற வள்ளிநாயகியின் கணவனை, மன முள்ள கடம்ப மாலையை அணிந்தவனை, மேகத்தைக் கண்டு களிக்கும் மயில் வாகனத்தை உடையவனைச் சாகும் வரைக்கும் மறவாமல் நினைப்பவர்க்கு இம்மையிலும் மறுமையிலும் ஒரு தாழ்வும் இல்லை. சேந்தன் செந்நிறமுடையவன். வெற்பு - மலை. கந்தம் - நறு மணம். கார்மயில் - கரிய மயில் என்றுமாம். சாந்துணைப் போதும் - சாகும் அளவுள்ள காலமெல்லாம். ஒரு தாழ்வும் என்ற உம்மை மறைந்து நின்றது. ஏகாரம் தேற்றம்.) இது கந்தர் அலங்காரத்தில் 72-ஆம் பாட்டு. 194