பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் வாராத பெண்ணுக்குத் தான் அநுபவிக்கும் இன்பத்தை எப்படிச் சொல்வது? அது அவள் அளவில் இரகசியமாக இருக்கும். "மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்எனில் சொல்லுமா றெங்ங்னே' என்கிறார் திருமூலர். அந்த இரகசியம் வேண்டும் என்றே மறைப்பது அன்று; சொன்னால் விளங்காதது. . பிறர் சொல்லாததனால் இரகசியமாக இருப்பது ஒன்று. சொன்னாலும் அநுபவம் இல்லாமையினால் உணர்ந்து கொள்ள முடியாதது ஒன்று. இப்படி இரண்டு வகை இரகசியங்கள் இருக் கின்றன. ஒன்று செயற்கை இரகசியம், மற்றொன்று இயற்கை இரகசியம் என்று சொல்லலாம். இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்ப அநுபவம் பக்குவம் பெற்ற ஆன்மாக்களினால் பெறுவதற்குரியது. பக்குவம் இல்லாதவர்களுக்கு அது தெரியாது. அதைப் பற்றிச் சொன்னா லும் தெரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் இரகசியம் என்ற பெயரைப் பெறுகிறது. இறைவன் திருவருள் அநுபவத்தை அநுபவிப்பவர்கள் அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். மகாத்மாகாந்தி அடிகளும், ராமகிருஷ்ண பரமஹம்சரும் தம் அநுபவங்களை இரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை. இரகசியம் இரகசியம் என்று பிறர் அறியாமல் எதையேனும் வைத்துக் கொள்கிறவர்களிடத்தில் பெரும்பாலும் பண்டம் ஒன்றும் இருப்பது இல்லை. அதனால்தான் காந்தி அடிகள் இரகசியமென்று யாரேனும் சொன்னால் அவரிடம் வஞ்சகம் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். இவை உலகத்தோடு ஒட்டிய இரகசியங்களுக்குத்தான் பொருந் தும். பக்குவம் அற்றவர்கள் தெரிந்துகொள்ளாத அநுபவம் என்ற இரகசியம் அத்தகையது அன்று. பூரீ ராமகிருஷ்ணருக்குத் தம் அநுபவம் எல்லாவற்றையும் தம்மைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆசை. சுட்டிக் காட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். எல்லோருடனும் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதே அவருக்குச் சமாதி நிலை கைகூடிவிடும். மெல்ல மெல்ல எல்லா வற்றையும் மறந்து அதில் லயித்துவிடுவார். மீண்டும் உலக நிலைக்கு வரும்போது, 'உங்களுக்கு அதைச் சொல்லவேண்டும் 197