பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தாய் குழந்தைக்குத் தின்பண்டம் பண்ணிக் கொடுக்கிறாள். "இது நன்றாக இருக்கிறதே. இனிப்பாக இருக்கிறதே. இது எப்படி இனிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே அம்மா' என்று தன் தாயிடத்தில் குழந்தை சொல்வது போல அருண கிரியார், யார் இன்பத்தைத் தந்தானோ அவனிடத்தில் தம் அநுபவத்தைச் சொல்கிறார். அறுமுகவா சொல்லொணாது இந்த ஆனந்தமே. எந்த ஆனந்தம்? 'ஏதோ ஒன்று ੋਪੋਣਾ வந்து என்னைத் தாக்கியது. மனோலயம் தானே உண்டாகும்படியாகச் செய்து என்னைத் தன்வசத்தே ஆக்கிக்கொண்டது. அந்த இன்பம் சொல்ல முடியா தது?’ என்று பேசுகின்றார். %. வந்து வந்து தாக்கும் மனோலயம் தானே தரும் எனைத் தன்வசத்தே ஆக்கும் அறுமுகவா சொல்லொணாது இந்த ஆனந்தமே. இட எல்லை கடந்தது ஒருவன் வந்தான் என்று சொன்னால் எங்கே இருந்து வந்தான் என்ற கேள்வி வரும். போனான் என்று சொன்னால் ஓரிடத்திலிருந்து பிரிந்து சென்றான் என்ற பொருள் வரும். ஒன்று வந்து வந்து தாக்கும் என்று சொல்கிறாரே, இவர் எங்கே இருந்தார்? வந்து வந்து தாக்கிய ஒன்று முன்பு எங்கே இருந்தது? இவரிடத்தில் வந்து தாக்கியது என்றால் முன்பு வேறு ஒரிடத் திலிருந்து பின்பு அவரிடத்தில் வந்து தாக்கியது என்றுதானே பொருள்? 'தபால்காரன் பக்கத்து வீட்டில் இருந்தான்; உடனே என் வீட்டுக்கு வந்தான்' என்றால், பக்கத்து வீட்டை விட்டு வந்தான் என்று ஆகும். 'அடுத்த வீட்டுக்குப் போனான்' என்றால் என் வீட்டை விட்டுப் போய்விட்டான் என்று ஆகும். அப்படி வந்து போகிறவன் பல இடங்களுக்கும் போகிறான். பல இடங்களிலிருந்தும் வருகிறான். இதைப் போல வேறு ஒரிடத் திலிருந்து வந்து தாக்கியதா? அப்படியே மற்றவர்களிடத்திலும் வந்து தாக்குமா? - இந்தக் கேள்விகளை அவரையே கேட்டுப் பார்க்கலாம். 2OO