பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் 'அப்படி இல்லை அப்பா உலகத்தின் சம்பிரதாயத்தை ஒட்டி அப்படிச் சொன்னேன் நான் என்பார். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறவன், 'திருவல்லிக்கேணி வந்து விட்டதா?’’ என்று கேட்கிறான். 'திருவல்லிக்கேணி வந்து விட்டது' என்கிறார் கண்டக்டர். உண்மையில் திருவல்லிக்கேணி வந்ததா, அல்லது நாம் வந்தோமா? அதுவரைக்கும் திருவல்லிக்கேணி நம்கண்ணில்படாதது அப்போது படுகிறது. திருவல்லிக் கேணியைக் காணும் அநுபவம் நமக்குச் சேருகிறது. அதனால் திருவல்லிக் கேணி வந்தது என்று சொல்கிறோம். இதை லட்சணை என்று இலக்கணக்காரர்கள் கூறுவார்கள். திருவல்லிக் கேணி இருந்த இடத்தில் இருக்கிறது. அதைக் காணும் அநுபவ நிலை நமக்கு வந்த போது அது வந்ததாகத் தெரிகிறது. ஒரு பொருளை ஒருவன் விட்டுப் பிரிந்து போவதும், அந்தப் பொருளை மீட்டும் அடைவதும் உலக இயல்போடு பொருந் தியவை. ஆனால் அருணகிரியார் குறிப்பிக்கும் இன்பமோ போக்கும் வரவும் இல்லாத ஒன்று. போக்கு வரவும். இல்லாது ஒன்று. "அது நீங்கள் இருக்கும் இடத்திற்கு வராமல் இருக்கலாம். அதனிடம் நீங்கள் போனிர்களா? என்ற கேள்விக்கு இடம் இல்லாமல், நானும் போகவில்லை; அதுவும் என்னிடத்தில் வரவில்லை. அதற்குப் போக்குவரத்து என்பதே இல்லை' என் கிறார். போக்கும் வரவும் இல்லாதது எப்படி வந்து வந்து தாக்கும் என்கிற சந்தேகம் நமக்குப் போகவில்லை. காற்று எங்கும் இருக்கிறது. காற்று இல்லாத இடத்தில் நம்மால் உயிரோடு இருக்க முடியாது என்பது தெரியும். ஆனால், 'காற்றே இல்லை என்று சில சமயங்களில் சொல்கிறோம். அப்படியே, "காற்றுச் சுகமாக வருகிறது' என்று சில சமயங்களில் சொல்வது உண்டு. இல்லையென்று சொன்னபோது காற்று எங்கே போயிற்று ஜில்லென்று வருகிறது என்று சொல்கிற போது எங்கே இருந்து வந்தது? எங்கும் இருக்கும் காற்று நம்மேல் வீசுகின்றபோது, அதாவது அதன் குளிர்ச்சி நம்மேல் பட அதை உணரும் போது, அது வந்தது என்று சொல்கிறோம். உணராதபோது இல்லை என்று சொல்கிறோம். 2O3,