பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 சாமானியக் காற்று அடித்தாலும் ஜூரம் உள்ளவனுக்குக் குளிர்வது போல இருக்கும். அந்தக் குளிர் நமக்குத் தெரியாது. குளிரவே இல்லை என்று சொல்வோம். ஜூரம் அடிக்கிறவனோ கம்பளிக்கு மேல் கம்பளி போர்த்துக் கொண்டிருப்பான். இரண்டு பேருக்கும் உடம்பு இருந்தாலும் அவன் உடம்பில் சிறிதளவு குளிர்ச்சியையும் உணருகின்ற பக்குவம் ஜுரத்தால் உண்டாகி யிருக்கிறது. அவ்வாறே அருணகிரியார் பெற்ற அநுபவம் போக்கும் வரவும் இல்லாமல் எங்கும் இருப்பது. அந்த அநுபவத் திற்குக் காரணமான பொருள் புதியதாக நம்மைச் சார வேண்டும் என்பது இல்லை. எப்போதும் நம் அருகில் நம் உள்ளேயே இருக்கிறது. ஆனால் உணர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சியும், பக்குவமும் நமக்கு இருப்பது இல்லை. : எங்கும் நிறைந்திருக்கிற பொருள் அது. அது இல்லாத இடம் இருந்தால் போக முடியும். அப்படி ஒரிடம் இல்லாமையினால் அந்தப் பொருளுக்குப் போக்கும் இல்லை, வரவும் இல்லை. அருணகிரிநாதப் பெருமானை இறைவனே அநுபவமயமாக நின்று தாக்கினான். அவன் எங்கும் இருப்பவன்; சர்வ வியாபி; சர்வாந்தர்யாமி. அவன் புதிதாக ஓரிடத்திலிருந்து வரவும் இல்லை, போகவும் இல்லை. ஆனால் அவனோடு சாருகின்ற உணர்ச்சியைப் பெறும் பக்குவம் வந்தால்தான் அவன் இருப்பது தெரியும்; வந்தது போலத் தெரியும். - 'நான் சொல்கிற ஒன்று எங்கே இருந்தும் போகவில்லை. எங்கிருந்தும் வரவில்லை. எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிற ஒரு பொருள்தான் என்னை வந்து வந்து தாக்கியது' என்கிறார். அருணகிரியார். போக்கும்வரவும்.... இல்லாது ஒன்று வந்துவந்து தாக்கும். “எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிற ஒரு பொருள் உங்களை வந்து வந்து தாக்கியது என்கிறீர்களே. அது இரவில் தாக்கியதா? பகலில் தாக்கியதா?" என்று கேட்கலாம். அதற்கும் விடை வருகிறது. கால எல்லை இல்லாதது "அப்பா அந்தப் பொருளுக்கு இட எல்லை கிடையாது. என்று சொன்னேன் அல்லவா? அதனால்தான் போக்கு வரத்து 2O2