பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லொணா ஆனந்தம் என்ற இரண்டும் அதற்கு இல்லை. எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிற அதற்கு இட எல்லை இல்லை. அது போலவே அதற்குக் கால எல்லையும் இல்லை." கோடைக் காலத்தில் வெப்பம் உண்டாகும் என்றும், பனிக் காலத்தில் குளிர் வரும் என்றும் சொல்வது போல, அந்தப் பொருள் தாக்க வரும் இன்பம் இன்னகாலத்தில்தான் வரும் என்று சொல்ல முடியாது. அது எப்போதும் இருந்து கொண்டிருப்பதால் அதைப் பெறும் பக்குவம் வரும் காலத்தில்தான் தாக்குதலை உணர்கிறோம். இன்ன காலத்தில்தான் வந்து தாக்கும் என்று சொல்வதற்கில்லை. நாம் நினைக்கிற பகல், இரவு, நாள், மாதம், ஆண்டு ஆகிய கால எல்லைகள் அந்தப் பொருளுக்கு இல்லை. எந்த நேரத்திலும் வந்து தாக்கும். இரவு பகல் என்ற கால எல்லை அற்றது. இரவு பகலும். இல்லாது ஒன்று வந்துவந்து தாக்கும். ஆண்டவன் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற் பட்டவன். அவன் இன்பமயமாக இருக்கிறான். அவன் திருவருளே இன்பம்: அதற்குக் கால எல்லை, இட எல்லை என்பதே இல்லை. ஒளி என்றால் நிழல் உண்டு. விளக்கை ஏற்றினால் வெளிச்சம் படுகிற பக்கம் அல்லாத பக்கத்தில் நிழல் இருக்கும். சர்வாந்தர்யாமியாக இருக்கிற எம்பெருமான் சோதிப் பிழம்பாக இருக்கிறான். அந்த ஜோதி நிழல் இல்லாத ஒளியாக இருக்கிறது. உண்மையில் எரியும் சுடருக்கு நிழல் இல்லை. அந்தச் சுடர் பற்றிக் கொள் கின்ற இடமாகிய விளக்கு இருந்தால்தான் நிழல் உண்டாகும். சுடருக்கு ஒளியும் அந்தச் சுடரை ஏந்தும் ஆதாரமாகிய விளக்குக்கு நிழலும் உண்டு. - எல்லாப் பொருளுக்கும் தானே ஆதாரமாக இருக்கிற சோதிப் பிழம்பாகிய ஆண்டவனுக்கு வேறு ஆதாரம் இல்லாமையினால் அவன் நிழல் இல்லா ஒளியாகத் திகழ்கிறான். பகல், இரவு என்ற வரையரையில்லாதவன். ஒரே ஒளிமயமாக இருக்கும் அந்தப் பெருமானுடைய அருள் இன்ப அநுபவம் கால எல்லையைக் கடந்து விளங்குவது. இருள் அற்றது; நிழலற்றது; பகலும் இரவும் அற்றது. ஆகவே, 2O3