பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தையும் வடிவையும் சொல்ல முடியாது. அவன் எந்தப் பொரு ளையும் பார்த்தவன் அல்ல. பார்த்திருந்தால் உவமையாகச் சொல்லி விளக்கலாம். இந்த இன்பமோ இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டது. இந்திரியங்களோடிருந்து அவற்றால் விளையும் இன்பங்களை அநுபவிக்கும் மனிதனுக்கு அவற்றுக்கு அப்பால் உள்ள இன்பத்தின் லேசம்கூடத் தெரியாது. அப்படி ஏதேனும் தெரிந்திருந்தால் அல்லவா உபமானத்தின் வாயிலாகச் சொல்ல முடியும்? ஆகவே அது வாயினாலேயும் இன்னபடி இருக்கும் என்று சொல்ல முடியாதது; வாக்கையும் கடந்தது. வாக்கும்.இல்லாது ஒன்று வந்து வந்து தாக்கும். அதிசயப் பெருக்கு அப்படியானால் இப்போது அருணகிரியார் தம்முடைய திருவாக்கினாலே அநுபவத்தைச் சொன்னாரே என்ற கேள்வி எழும். அவர் இங்கே சொன்னது அநுபவம் அன்று. அநுபவத் தைப் பெற்ற பிறகு உண்டாகும் அதிசயப் பெருக்கு. அநுபூதிப் பாடல்கள் என்று சொல்கிற எல்லாமே இந்த வகையில் இருப்பவைதாம். சர்க்கரைப் பொங்கலை உண்டான் ஒருவன். நிரம்ப உண்டுவிட்ட பிறகு, "நான் அதனை உண்டேன்' என்று சொல்ல வருகிறான். அப்போது அவனுக்கு ஏப்பம் வருகிறது. அந்த ஏப்பத்தால் அவன் உண்டது உண்மை என்று புலனாகிறது. பொங்கலே உண்ணாமல் நான் உண்டுவிட்டேன் என்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிச் சொல்கிறவர்களுக்குள் ஏப்பம் விட்டுக் கொண்டு சொல்கிறவன் உண்மையான அநுபவத்தைப் பெற்ற வன் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர் களுக்கும் அவனுக்கும் வேறுபாடு காட்டுவது அந்த ஏப்பந்தான். அது அநுபவித்தவனுக்குத்தான் வரும். அதனைக் கொண்டு அவன் உண்டது உண்மை என்று நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆனால் ஏப்பமே சர்க்கரைப் பொங்கல் ஆகாது. அது போல் இறைவன் திருவருள் அநுபவத்தைப் பெற்ற பலனாகப் பலர் பாடியிருக்கிறார்கள். மற்றவர்கள் சொன்னதை எல்லாம் வைத்துக் கொண்டு வாக்குத் திறமையினால் அலங்காரமாகப் பாடியவர்கள் உண்டு. அவர்களுடைய வாக்கில் ஒரு கசிவு இராது. மணிவாசகர், அருணகிரியார் போன்ற அநுபூதிமான்கள் பாடிய பாடல்களில் 2O6