பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பண்டமும், கண்ணும் இருந்து பார்த்தல் இல்லாவிட்டால் காட்சி நிகழாது. கண் இல்லாவிட்டாலும் காட்சி இல்லை. ஆனால் அருணகிரியார் சொல்லும் அநுபவமோ, மனோலயம் உண்டாகச் செய்வது; இன்னவாறு இருந்தது என்று சொல்ல முடியாமல் அமைந்தது. மூன்று பொருளென்ற வேறுபாடே அற்ற ஒருமை நிலை உண்டாயிற்றாம். வடிவும் முடிவும் அது கண்ணாலே பார்ப்பதற்குரியது அன்று. ஆதலின், வடிவும் இல்லாது ஒன்று வந்து வந்து தாக்கும் என்றார். 'போக்கு இல்லை, வரவு இல்லை. பகல் இல்லை, இரவு இல்லை. உள் இல்லை, புறம் இல்லை, வாக்கு இல்லை, வடிவு இல்லை என்று சொன்னீர்களே. அந்த அநுபவத்தைப் பற்றி இப்போது எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே; அந்த அநுபவம் முடிந்துவிட்டதா?’ என்று அவரையே கேட்கலாம். 'முடிவா? முடிவு இல்லாத பேரானந்தம் அது' என்று வியப் புடன் சொல்கிறார். எதற்கு ஆதி உண்டோ அதற்கு அந்தம் உண்டு. வந்து வந்து தாக்கியது என்று சம்பிரதாயத்திற்குச் சொன்னது போல, இது தோன்றியது என்றும், இது தோன்றாமல் இருந்தது என்றும் சொல்லலாமே அன்றி, அது உண்டாயிற்று, முடிந்தது என்று சொல்ல இயலாது. அந்த இன்பமே கடவுள். கடவுளே இன்பம். ஆதலின் கடவுளுக்கு எப்படி முடிவு இல்லையோ அதுபோல அந்த ஆனந்தத்திற்கும் முடிவு இல்லை. "பார்க்குமிட மெங்கும் ஒரு நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணானந்தமே." என்று தாயுமானவர் இறைவனைக் கூறுவார். சச்சிதானந்த சொரூபி என்று பொதுவாக எல்லோரும் சொல்வது உண்டு. அத்தகைய ஆண்டவனுக்கு ஆண்பால், பெண்பால், ஆதி, அந்தம் என்ற வரையறையே இல்லை. அவனாகவே நின்ற ஆனந்தத்திற்கும் அவை இல்லை. அதனால், 2Ο8